போதைப்பொருளுக்கு அடிமையான வேட்பாளர்களுக்கு வாக்களிக்காதீர்கள் - ஜனாதிபதி
போதைப்பொருளுக்கு அடிமையான எக் கட்சியின் வேட்பாளருக்கும் வாக்கு களை வழங்க வேண்டாமென ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன வேண்டு கோள் விடுத்துள்ளார்.
நாட்டுக்கும் எதிர்கால தலைமுறை க்கும் முன்மாதிரியை வழங்கக்கூடிய மக்கள் பிரதி நிதிகளை நாட்டுக்கும் கிராமத்திற்கும் தெரிவு செய்ய வேண்டும் சுட்டிக்காட்டியுள்ளார். இம்முறை உள்ளூராட்சித் தேர்தலில் ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டணியில் பொலன்னறுவை நகர சபை மற்றும் பிரதேச சபைகளுக்கு போட்டியிடும் வேட்பாளர்களுக்காக நேற்று பிற்பகல் பழுகஸ்தமன பிரதேசத்தில் நடைபெற்ற மக்கள் சந்திப்பில் இவ்வாறு தெரிவி த்துள்ளார்.
நாட்டுக்கும் எதிர்கால தலைமுறை க்கும் முன்மாதிரியை வழங்கக்கூடிய மக்கள் பிரதி நிதிகளை நாட்டுக்கும் கிராமத்திற்கும் தெரிவு செய்ய வேண்டும் சுட்டிக்காட்டியுள்ளார். இம்முறை உள்ளூராட்சித் தேர்தலில் ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டணியில் பொலன்னறுவை நகர சபை மற்றும் பிரதேச சபைகளுக்கு போட்டியிடும் வேட்பாளர்களுக்காக நேற்று பிற்பகல் பழுகஸ்தமன பிரதேசத்தில் நடைபெற்ற மக்கள் சந்திப்பில் இவ்வாறு தெரிவி த்துள்ளார்.
மேலும் உரையாற்றிய ஜனாதிபதி...........
புதிதாக தெரிவாகும் நகர சபை மற்றும் உள்ளூராட்சி சபை பிரதிநிதிகளை ஒன்று சேர்த்து இதற்கு முன்பு எந்தவொரு அரசாங்கமும் முன்னெடுக்காத நிக ழ்ச்சித்திட்டமொன்றை நாடளாவிய ரீதியில் நடைமுறைப்படுத்துவதாக தெரி வித்தார்.
நாட்டின் எதிர்காலத்திற்காக செயலணிகளை அமைப்பதாகவும் ஜனாதிபதி இதன்போது குறிப்பிட்டார்.
இன்று நாடு எதிர்நோக்கியுள்ள போதைப்பொருள் பிரச்சினையில் இருந்து சமூகத்தை விடுவிப்பதற்கு இம்முறை தேர்தலில் போட்டியிடும் பெண் பிரதி நிதிகளை ஒன்று திரட்டி போதைப்பொருள் ஒழிப்பு செயலணி ஒன்றை கட்டியெழுப்புவதற்கான நடவடிக்கை முன்னெடுக்கப்படு மெனத் தெரிவித்துள்ளார்.
நாட்டின் நல்ல பெயருக்கு பெரும் களங்கமாக உள்ள தற்கொலையை தவிர்ப்ப தற்கு இளம் பிரதி நிதிகளை ஒன்று திரட்டி நிகழ்ச்சித்திட்டம் ஒன்றை நடை முறைப்படுத்த எதிர்பார்ப்பதாகவும் ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.
நாட்டின் இயற்கை வளங்களை பாதுகாப்பதற்கு சுற்றாடல் பாதுகாப்பிற்கு தலைமைத்துவம் வழங்குவதற்கு கற்ற இளம் தலைமுறையின் பங்களிப்பை பெற்றுக்கொள்வதற்கு எதிர்பார்ப்பதாக ஜனாதிபதி தெரிவித்தார்.
தேர்தலில் வெற்றி பெறுவோர் போன்று வெற்றி பெறாதவர்ளையும் கட்சி பேத மின்றி இந்த நிகழ்ச்சித்திட்டத்திற்கு இணைத்துக்கொள்ள உள்ளதாக ஜனா திபதி சுட்டிக்காட்டினார்.
அனைவரும் நாட்டின் எதிர்காலத்திற்காக தமது கடமைகளையும் பொறுப்பு க்களையும் நிறைவேற்றுவதற்கு அர்ப்பணிப்புடன் செயற்பட வேண்டுமென மைத்திரிபால சிறிசேன எச்சரிக்கை விடுத்துள்ளார்.
இம்முறை உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்ட ணியில் போட்டியிட்டு வெற்றிபெறும் வெற்றி பெறாத அனைத்து வேட்பாளர்க ளையும் அவர்கள் பிரதி நிதித்துவப்படுத்தும் கிராமத்தில் தமது பிரதி நிதியாக நியமித்து தற்போதைய அரசாங்கம் முன்னெடுத்துள்ள அபிவிருத்தி நிகழ்ச்சித் திட்டங்களை மிகவும் வினைத்திறன்மிக்க வகையில் முன்னெடுக்கவுள்ளதாக ஜனாதிபதி மேலும் தெரிவித்துள்ளார்.
வடமத்திய மாகாண முன்னாள் முதலமைச்சர் பேசல ஜயரட்ன, ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பொலன்னறுவை மாவட்ட அமைப்பாளர் மித்ரபால லங்கேஸ்வர உள்ளிட்ட பொலன்னறுவை மாநகர சபை, மெதமழுவ, பழு கஸ்தமன, சேவாகம, விஜயராஜபுர பிரதேச சபைகளுக்கு ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பில் போட்டியிடும் வேட்பாளர்கள் இந்நிகழ்வில் பங்கு கொண்டனர் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.