10 நாட்களாக படுக்கையில் இருக்கும் நான் எப்படி அரச தரப்புடன் பேச முடியும்?
நான் கடந்த 10 தினங்களாக சுகவீனம் காரணமாக படுக்கையில் இருக்கும் இந்நிலையில் எவ்வாறு நான் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை சந்தி த்து அரசாங்கத்துடன் இணைவது குறி த்து பேச்சுவார்த்தை நடத்த முடியு மெனக் கூட்டு எதிரணியின் முக்கிய ஸ்தரும் கண்டி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான கெஹெலியரம்புக்வெல்ல கேள்வி எழுப்பியுள்ளார். மூழ்கிக்கொண்டிருக்கும் கப்பலில் யா ரும் ஏறமாட்டார்கள். அதேபோன்று மக்களின் செல்வாக்கை இழந்து கொண்டிருக்கும் இந்த அரசாங்கத்துடன் நான் இணைந்து கொள்ளமாட்டேன் என கெஹெலியரம்புக்வெல்ல தெரிவித்துள்ளார்.
கூட்டு எதிரணியை பிரதி நிதித்துவம் செய்யும் கண்டிமாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் அரசாங்கத்தில் இணைந்து ஊடகத்துறை இராஜாங்க அமைச்சுப் பதவியை பெற்றுக்கொள்ளப்போவதாக வெளிவரும் தகவல்கள் குறித்து வினவியபோதே அவர் இவ் விடயங்களை தெரிவித்தார்.
இதுதொடர்பில் கெஹெலியரம்புக்வெல்ல தெரிவிக்கையில்.....
நான் அரசாங்கத்தில் இணைந்து அமைச்சுப் பதவியை பெற்றுக்கொள்ளப்போவதாக ஊடகங்கள் செய்தி தெரிவித்துள்ளன ஆனால் அவ்வாறு நான் இணைந்துகொள்ள போவதில்லை. மேலும் நான் ஜனாதிபதியை சந்திக்க இருந்ததாகவும் தகவல் வெளியாகின.
நான் கடந்த 10 நாட்களாக சுகவீனமுற்று படுத்த படுக்கையில் உள்ளேன் இன்றுதான் ( நேற்று) சற்று குணமடைந்து தேர்தல் பணிகளில் ஈடுபட ஆரம்பித்திருக்கின்றேன். இந்நிலையில் கடந்த 10 நாட்களாக படுக்கையில் இருந்த நான் அரச தரப்புடன் இணைவது தொடர்பில் பேச்சுவார்த்தை நடத்த முடியும்.
அதுமட்டுமல்லாது எந்தவொரு மனிதனும் மூழ்கிக்கொண்டிருக்கின்ற கப்ப லில் ஏறப்போவதில்லை.
அதேபோன்று மூழ்கிக்கொண்டிருக்கின்ற கப்பல்போன்று காட்சியளிக்கின்ற அரசாங்கத்தில் இணைந்துகொள்ளும் எண்ணம் எனக்கில்லை இதை நான் மிகவும் ஆணித்தரமாகத் தெரிவித்துக்கொள்கி ன்றேன்.
அரசாங்கம் நாளுக்கு நாள் மக்களின் செல்வாக்கை இழந்து வருகின்றது.
கட ந்த தேர்தல் காலத்தில் மக்களுக்கு வழங்கிய வாக்குறுதிகள் நிறைவேற்றப்பட வில்லை. எனவே அரசாங்கம் தொடர்பில் மக்கள் பாரிய அதிருப்தியுடன் உள்ளனர்.
அச் செயற்பாட்டினால் தான் நாங்கள் தேர்தலில் ஈடுபடுகின்றோம். எனவே அவ்வாறன நிலையில் நான் அரசாங்கத்தில் இணைந்துகொள்வேனா எனக் கேள்வி எழுப்பியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.