மஹிந்த அணி வெல்வதில் உறுதியாம் - பஸில்!
எவ்வாறான சவால்களுக்கு மத்தியிலும் தேர்தலை எதிர்க்கொண்டு, மகிந்த அணி வெல்வது உறுதி என்று தெரிவித்துள்ளார் முன்னாள் அமைச்சர் பஸில் ராஜபக்ஷ.
தெஹிவளையில் நேற்றைய தினம் நடைபெற்ற நிகழ்வொன்றில் கலந்து உரையாற்றுகையில் இக்கருத்தை வெளியிட்டுள்ளார். மேலும் கருத்து தெரிவித்த அவர் தற்போதைய அரசா ங்கத்தினர் வீதிகளை புனரமைக்காது அபிவிருத்தி இடம்பெறுவதாக தெரி வித்துள்ளனர்.
மத்திய வங்கியிலும் முறி விநியோகம் தொடர்பான பிரச்சினைகள் இடம்பெ றுகின்றன. தேர்தல் பிற்போடப்பட்டவாறு நகர்கின்றது. அத்தியவாசிய பொரு ட்களின் விலைகளும் அதிகரித்துள்ளன.
இவ்வாறானதொரு நிலையில், எவ்வாறான சவால்களுக்கு மத்தியிலும் தேர்தலை எதிர்கொண்டு மகிந்த அணி வெல்வது உறுதி எனவும் பஸில் ராஜ பக்ஷ தெரிவித்துள்ளார்.