Breaking News

கன்னியாகுமரியில் நத்தார் விழாவில் தினகரனைச் சந்தித்த சுமந்திரன் !

சென்னை ஆர்.கே நகர் தொகுதியில் சுயேட்சை வேட்பாளராகப் போட்டியிட்டு, வெற்றி பெற்ற ரி.ரி.வி. தினகரன், கன்னியாகுமரியில் கடந்த வெள்ளிக்கிழமை நடந்த நத்தார் விழாவில் சுமந்திரனை சந்தித்துள்ளார். 

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ. சும ந்திரனி டம், இலங்கைத் தமிழர்களின் தற்போதைய நிலவரம் தொடர்பாக வினாவியுள்ளார். இவ் விழாவில், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தன் பங்கேற்க விருந்தார். 

ஆனால் அவர் சுகவீனமடைந்திருந்ததால், அவரது பிரதி நிதியாக நாடாளு மன்ற உறுப்பினர் சுமந்திரன் இந்த நத்தார் விழாவில் கலந்துகொண்டார்.  இந்த விழாவில் பங்கேற்ற ரிரிவி தினகரனுடனான சந்திப்பு குறித்து கருத்து தெரி வித்த எம்.ஏ.சுமந்திரன், “பொதுக் கூட்டம் தொடங்குவதற்கு முன்னர், சுமார் 20 நிமிடங்கள் நாங்கள் இருவரும் சந்தித்து கலந்துரையுள்ளோம்.  

போருக்குப் பின்னரான சூழலில் வடக்கு, கிழக்கில் உள்ள தமிழர்கள் எப்படி உள்ளனர் என்று தினகரன் வினாவியுள்ளார்.  மகிந்த ராஜபக்ச அரசாங்கத்தை விட, தற்போதைய கூட்டு அரசாங்கம் சிறந்ததா என தினகரன் ஆதரவாளர்கள் சிலர் என்னிடம் கேள்வி தொடுத்தனர். 

அதற்கு நான் இப்போதைய அரசாங்கம் பரவாயில்லை. ஆனாலும் தமிழ் மக்க ளின் நீண்டகாலப் பிரச்சினைக்கான அரசியல் தீர்வைத் தேடும் முயற்சிகள் இன்னமும் தொடர்கின்றன” எனத் தெரிவித்தாக கூறியுள்ளார்.