முதல்வரின் உத்தரவு உதாசீனம்; வவுனியா பழைய பேரூந்து நிலையத்தில் சேவை ஆரம்பம்!
வவுனியா புதிய பேரூந்து நிலையத்தில் இருந்து இன்று முதல் பேரூந்துகள் சேவையில் ஈடுபட வசதியாக பழைய பேரூந்து நிலையத்தினை மூடி விடு மாறு வடமகாண முதலமைச்சரினால் பொலிஸாருக்கு வழங்கப்பட்ட உத்த ரவு உதாசீனப்படுத்தப்பட்டுள்ளதாக பலர் தெரிவித்துள்ளனர்.
வவுனியாவில் கடந்த ஒரு வருட காலமாக பயன்பாடின்றி காணப்படும் புதிய பேரூந்து நிலையத்தினை மீள இயக்கும் நோக்கோடு வடமாகாண முதலமைச்சரினால் இன்று தொட க்கம் தனியார் மற்றும் இலங்கை போக்குவரத்து சபையின் பேரூந்துகள் சேவையில் ஈடுபட வேண்டுமென கோரிக்கை விடுக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் இது வரை காலமும் இல ங்கை போக்குவரத்து சபையின் பேரூந்துகள் சேவையில் ஈடுபட்டு வந்த நகர சபைக்கு சொந்தமான பகுதியை தனியார் வாகனங்கள் சென்று வருவதற்கு மாத்திரம் அனுமதி வழங்கும் வகையில் பேரூந்துகள் உட்செல்லாத வகை யில் 24 ஆம் திகதி நள்ளிரவு 12 மணி முதல் மூடுமாறு வடமாகாண சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகருக்கு முதல மைச்சர் கடிதம் மூலம் தெரிவித்துள்ளார்.
இந் நிலையில் பழைய பேரூந்து நிலையம் மூடப்படாமல் காணப்பட்டதுடன் பொலிஸார் மற்றும் வவுனியா நகரசபை செயலாளர் உட்பட்ட உத்தியோக த்தர்கள் அவ்விடத்திற்கு பிரசன்னமாகியுள்ளனர். எனினும் பொலிஸார் தம க்கு பேரூந்து நிலையத்தினை மூடுமாறு உத்தரவு வரவில்லை எனவும் நகர சபையினரே மூட வேண்டுமென தெரிவித்ததுடன் அவ்வாறு மூடும் பட்சத்தில் தாம் பாதுகாப்பு வழங்குவதாகவும் கோரிக்கை விடுத்திருந்தனர்.
இவ்வாறான சூழலில் பழைய பேரூந்து நிலையப்பகுதிக்கு வருகை தந்த வவு னியா தலைமையக பொலிஸ் பொறுப்பதிகாரி வவுனியா நகரசபை செயலா ளரிடம் நகரசபையினால் பேரூந்து நிலையத்தினை மூடுங்கள் என தெரிவிக்க ப்பட்டபோதிலும் அவ்வாறான உத்தரவு தமக்கு கிடைக்கவில்லை எனவும் முதலமைச்சர் சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகருக்கே உத்தரவு இட்டுள்ளதா கவும் நகரசபை செயலாளர் தெரிவித்துள்ளார்.
இந்நிலையில் முதலமைச்சரின் உத்தரவை பொலிஸார் கடைப்பிடிக்காமை யினால் வழமைபோன்றே இலங்கை போக்குவரத்து சபையின் பேரூந்துகள் பழைய பேரூந்து நிலையத்தில் இருந்து சேவைகளை முன்னெடுக்கப்பட்டு ள்ளது.