தமிழ்த்தேசியக் கூட்டமைப்புக்கு மேலும் ஒரு கட்சி ஆதரவு என்கிறார் - சி.வி.கே.சிவஞானம்
ஜனநாயக போராளிகள் கட்சி தமிழரசுக் கட்சியின் ஆசன ஒதுக்கீடு ஊடாக இம்முறை உள்ளூராட்சி தேர்தலில் போட்டியிடுவதாக தமிழரசுக் கட்சியின் இணை செயலாளரும், வடமாகாண சபை அவைத்தலைவருமான சி.வி.கே. சிவஞானம் தெரிவித்துள்ளார்.
தமிழரசு கட்சியின் யாழ்.மார்ட்டீன் வீதி அலுவலகத்தில் நேற்றைய (சனி க்கிழமை) தினம் நடைபெற்ற ஊடக வியலாளர் சந்திப்பில் கலந்த போதே இவ்வாறு தெரிவித்துள்ளார்.
தமிழ்த் தேசிய கூட்டமைப்பில் தற் போது தமிழரசு கட்சி, ரெலோ மற்றும் புளொட் ஆகிய கட்சிகளே தற்போது பங்காளி கட்சிகளாக உள்ளன. இந்த நிலையில் நடைபெறவுள்ள உள்ளூராட்சி தேர்தலில், தமிழரசு கட்சியின் ஆசன ஒதுக்கீட்டில் ஜனநாயக போராளிகள் கட்சியை சார்ந்தவர்களும் தேர்தலில் போட்டியிடுகின்றார்கள் எனத் தெரி வித்துள்ளார்.