Breaking News

ஈழத் தமிழ் அகதி அவுஸ்ரேலியாவால் நாடு கடத்தப்பட்டார் - இளைஞன் ராஜா

தமிழர்கள் நாடு கடத்தப்பட்டால் ஸ்ரீலங்காவில் கொடூரமான சித்திரவதை களுக்கு உள்ளாகலாமென ஐக்கிய நாடுகள் சபை எச்சரிக்கை விடுத்த நிலை யில் ஈழத் தமிழ் இளைஞர் ஒருவரை அவுஸ்திரேலிய அரசாங்கம் ஸ்ரீலங்கா விற்கு நாடு கடத்தியுள்ளது.

பாதுகாப்பு அச்சுறுத்தல்கள் காரண மாக நாட்டை விட்டு தப்பிவந்த ஈழத் தமிழர்களை திருப்பி அனுப்பினால் ஸ்ரீலங்காவில் கொடூரமான சித்திர வதைகளுக்கு ஆளாகலாம் என்பதால் அவர்களை திருப்பி அனுப்பாதீர்கள் என ஐக்கிய நாடுகள் சபை கடந்த டிசெம்பர் 11 ஆம் திகதி கோரிக்கை விடுத்திருந்தது. உயிர் அச்சுறுத்தல் காரணமாக ஸ்ரீலங்காவை விட்டு வெளி யேறி 2012 ஆம் ஆண்டு படகு மூலம் அவுஸ்திரேலியாவிற்குள் நுழைந்து அர சியல் தஞ்சம் கோரிய ராஜா என்ற ஈழத் தமிழ் இளைஞரே புதன்கிழமை இரவு அவுஸ்தி ரேலிய அரசினால் பலவந்தமாக நாடு கடத்தப்பட்டுள்ளதாக அவரது சட்டத்தர ணிகள்  தெரிவித்துள்ளனர். 

படகு அகதிகள் தடுத்து வைக்கப்படும் விலாவூட் அகதிகள் தடுப்பு முகாமிலி ருந்து கைகளுக்கு விலங்கிட்டு ராஜா என்ற ஈழத் தமிழ் இளைஞரை அழை த்துச் சென்ற அவுஸ்திரேலிய குடிவரவுத்துறை அதிகாரிகள் தமது எச்சரிக்கை களையும் செவிமடுக்காது சிட்னி விமான நிலையத்தில் வைத்து விமானத்தில் ஏற்றி நாடு கடத்தியதாக அவுஸ்திரேலியாவின் அகதிகளுக்கான ஆலோ சணை மற்றும் சட்ட நடவடிக்கைகளுக்கான சட்டத்தரணி சாரா டலே தெரி வித்துள்ளார். 

 ராஜா என்ற ஈழத் தமிழ் இளைஞர் நாடு கடத்தப்பட்டால் ஸ்ரீலங்காவில் அவர் கொடூரமான சித்திரவதைகளுக்கு ஆளாகலாம் என்று எச்சரித்தும் அவுஸ்தி ரேலிய குடிவரவுத்துறை அதிகாரிகள் தமது எச்சரிக்கைகளையும் செவிமடு க்காது அவரை நாடு கடத்தியதாக சட்டத்தரணி சாரா டலே ஆதங்கம் அடை ந்துள்ளார். 

அவுஸ்திரேலிய அரசிடம் அரசியல் தஞ்சம் கோரும் விண்ணப்பங்களை இது வரை சமர்ப்பிக்காத தஞ்சக்கோரிக்கையாளர்கள் கடந்த ஒக்டோபர் 1 ஆம் திக திக்குள் சமர்பிக்க வேண்டும். இல்லையெனில் அவர்களது தஞ்சக் கோரிக்கை ஒருபோதும் பரிசீலணைக்கு எடுத்துக்கொள்ளப்பட மாட்டாது என்று கடந்த மே மாதம் அவுஸ்திரேலிய குடிவரவுத்துறை அமைச்சர் பீட்டர் டட்டன் தெரி வித்திருந்தார். 

அவுஸ்திரேலியாவில் தஞ்சமடைந்துள்ள ஆயிரக்கணக்கான தஞ்சக் கோரி க்கையாளர்கள், முறையான சட்ட உதவிக்காக அகதி சட்ட மையத்தில் நீண்ட காலமாக காத்திருக்கும் சூழல் நிலவும் நிலையில், ‘பாஸ்ட்- டிராக்’ என்ற இந்த துரித நடைமுறையின் கீழ் தஞ்சக் கோரிக்கைக்கான புதிய விண்ணப்பங்களை அளித்த பலர், சாதாரண நடைமுறையின் கீழ் கிடைக்கும் பாதுகாப்பு மற்றும் மேல்முறையீட்டுக்கான சலுகைகளை இழக்கின்றனர். 

இதற்கமைய 41 பக்கங்களைக் கொண்ட ஆங்கில விண்ணப்பத்தை நிரப்ப போராடிய ராஜா என்ற ஈழத் தமிழ் இளைஞர், குறித்த காலக்கெடுவிற்குள் அவ்விண்ணப்பத்தை நிரப்பும் சட்ட உதவியினை பெறமுடியாது போனது. இதனாலேயே அவர் அவுஸ்திரேலியாவினால் நாடு கடத்தப்பட்டுள்ளார். 

இந்த நிலையில் ராஜாவைப் போன்று ஏழாயிரம் தஞ்சக் கோரிக்கையாளர்களு க்கு அக்டோபர் 1 காலக்கெடுவாக நிர்ணயிக்கப்பட்டிருந்தது. ராஜாவைப் போன்று 71 பேர் தங்கள் விண்ணப்பங்களை காலக்கெடுவிற்குள் சமர்பிக்க முடியாத சூழல் ஏற்பட்டுள்ள நிலையிலேயே அவர்களின் விண்ணப்பம் பரி சீலணைக்கு எடுத்துக் கொள்ளப்படாமலேயே நிராகரிக்கப்பட்டுள்ளது. 

நாடு கடத்தப்பட்ட ராஜா என்ற தமிழ் இளைஞருக்கு சட்ட உதவி வழங்கிய அவுஸ்திரேலிய அகதிகளுக்கான ஆலோசணை மற்றும் சட்ட உதவி மைய த்தின் தலைமை வழக்கறிஞர், சாரா டேய்ல் கவலை அடைந்துள்ளார். 

ஆயிரக்கணக்கான தஞ்சக்கோரிக்கையாளர்களின் வழக்கை பரிசீலித்த அடி ப்படையில் ராஜா என்ற இளைஞனின் வழக்கு அவுஸ்திரேலியாவில் பாது காப்பு வழங்குவதற்கான நம்பகமான வழக்காகும் என்று குறிப்பிட்டுள்ள சட்ட த்தரணி டேய்ல், ஆனால் அவுஸ்திரேலிய குடிவரவுத்துறை காலக்கெடுவி ற்குள் வழங்கவில்லையென சுருக்கமாக தங்களது பதிலை வழங்கி அவரை நாடு கடத்தியமை வேதனைக்குரிய விடயம் எனத் தெரிவித்திருக்கிறார்.

அவுஸ்திரேலியாவிலிருந்து தமிழர்கள் நாடுகடத்தப்படும் நிலையைப் பற்றி கருத்துத் தெரிவித்துள்ள அவுஸ்திரேலிய குடிவரவுத்துறையின் பேச்சாளர் “தஞ்சக்கோரிக்கையாளர்களுக்கான சர்வதேச கடமையின் கீழ் உள்ளடக்க க்கூடிய எவரையும் தாங்கள் திருப்பி அனுப்புவதில்லை” எனத் தெரிவித்து ள்ளார்.

அண்மையில் இலங்கைக்கு வருகை தந்த ஐ.நா. சிறப்பு அதிகாரி பென் எம்மெர்சன், தேசியப் பாதுகாப்பு என்ற அடிப்படையில் இன்றும் பலர் கைது செய்யப்படுவதும், சித்திரவதைகளுக்கு ஆளாக்கப்படுவதும் தொடர்ந்து இடம் பெறுவதாக கவலை அடைந்துள்ளார். 

இப்படியான சூழலில் அவ்வப்போது தஞ்சக்கோரும் தமிழ் அகதிகள் நாடு கடத்தப்படக்கூடிய சம்பவங்கள் அரங்கேறி வருவதனால் அச்சமும் கவலை களும் முன்னிலைப்படுத்தப்பட்டுள்ளன.