Breaking News

ஆசனப் பங்கீடுகள் உறுதியாகாத நிலையில் கூட்டமைப்பின் சந்திப்பு நிறைவெய்தியது !

தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் பங்காளிக் கட்சிகளுக்கு இடையேயான கலந்துரையாடல் வேட்பு மனுக்களைத் தயாரிப்பதற்கான ஆசனப் பங்கீடுகள் தொடர்பாக உறுதி முடிவு எடுக்கப்படாத நிலையில் கலந்துரையாடல் நிறை வடைந்துள்ளதாக தகவல் வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. 

தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் பங்  காளிக் கட்சிகளுக்கு இடையேயான கலந்துரையாடல் யாழ்ப்பாணம் மாட்  டீன் வீதியிலுள்ள தமிழ் அரசுக் கட்சி யின் அலுவலகத்தில் நேற்றிரவு (18) நடைபெற்றது. வேட்பு மனுக்களைக் கையளிக்கும் இறுதி நாள் எதிா்வரும் வரும் வியாழக்கிழமை நண்பகல் 12 உடன் நிறைவிற்கு வருவதால் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் அங்கத்துவக் கட்சிகள் தமிழ் அரசுக் கட்சி, புளொட் மற்றும் ரெலொ ஆகியவற்றின் உயர்ம ட்டத்தினர் நேற்றிரவு 7 மணி முதல் சுமார் 2 மணிநேரம் ஆசன ஒதுக்கீடுகள் தொடர்பில் கலந்துரையாடினர். 

யாழ்ப்பாணம் மாநகர சபை மற்றும் கிளிநொச்சியில் மூன்று பிரதேச சபைக ளுக்குமான ஆசனப் பங்கீட்டில் புளொட் கட்சிக்கு அநீதியிழைக்கப்பட்டுள்ளதா கத் தெரிவித்து அந்தக் கட்சியின் தலைவரான நாடாளுமன்ற உறுப்பினர் த.சித்தார்த்தன் கூட்டத்திலிருந்து இடையில் வெளியேறிச் சென்றுள்ளார். 

இந்த நிலையில் எந்த ஆசனப் பங்கீடுகள் உறுதி செய்யப்படாமலேயே நேற்றைய கலந்துரையாடல் நிறைவெய்தியுள்ளது.  இந்நிலையில் இன்றும் (19) செவ்வாய்கிழமை பேச்சுக்கள் தொடருமெனத்  தெரிவிக்கப்பட்டுள்ளது.