இலங்கையின் இரண்டாவது தலைநகர் கடவத்தை நகரம் !
இலங்கையின் இரண்டாவது தலைநகராக கடவத்தை நகரம் மாற்றம்பெற வுள்ளதாக பிரதி அமைச்சர் லசந்த அழகியவண்ண தெரிவித்துள்ளாா். இத ற்கான செயற்பாடுகளை ஆரம்பிக்கவுள்ளதாகவும் பிரதி அமைச்சர் லசந்த அழகியவண்ண தெரிவித்துள்ளார்.
கொழும்பு கண்டி பிரதான வீதியிலு ள்ள பிரதான பரிமாற்ற மையமாக கட வத்தை நகரத்தை மாற்றுவதற்கான நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டு ள்ள நிலையில் இலங்கையின் இர ண்டாவது தலைநகராக கடவத்தை நகரம் மாற்றப்படவுள்ளதாக தகவல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
2018ம் ஆண்டு ஜனவரி மாதத்தில் இலங்கையின் இரண்டாவது தலைநகராக கடவத்தை நகரத்தை மாற்றுவதற்கான நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்படும் என அறியமுடிகிறது.
மேலும் 2020ஆம் ஆண்டு இலகு ரயில் சேவை கடவத்தை வரை ஆரம்பிக்கவுள்ளதாகவும் பிரதி அமைச்சர் லசந்த அழகியவண்ண தெரி வித்துள்ளார்.
இதேவேளை கடவத்தையிலிருந்து மீரிக வரை பகுதியளவில் மத்திய அதி வேக நெடுஞ்சாலை வேலைத்திட்டம் முன்னெடுக்கப்பட்டு வருகிறது.
இந்த செயல்திட்டமும் 2020ஆம் ஆண்டளவில் பூர்த்தியாகுமென எதிர்ப்பார்ப்பதாக தெரிவிக்கப்படுகின்றது.
இந்த அதிவேக நெடுஞ்சாலை நிர்மாண வேலைகளின் போது, கம்பஹா, மீரிகம மற்றும் பெம்முல்ல பிரதேசங்களில் மூன்று கொங்கிறீட் பாலங்கள் நிர்மாணிக்கப்படவுள்ளது.