அருந்தவபாலனுக்கு நேர்ந்த பரிதாபம்! தேர்தலை புறக்கணிக்கப் போகிறாராம் !
தமிழரசுக்கட்சியால் தொடர்ந்தும் ஓரங்கட்டப்பட்டு ஒதுக்கப்பட்ட போதிலும் மீண்டும், மீண்டும் தமிழரசுக்கட்சி விசுவாசியாக தன்னை காட்ட முற்பட்டு மீண்டும் மூக்குடைபட்ட தென்மராட்சி அமைப்பாளர் அருந்தவபாலன் தனது அணியுடன் தேர்தலை புறக்கணிக்க உள்ளதாக தெரிவித்துள்ளார். கடந்த இரண்டு முறை நாடாளுமன்றத் தேர்தல்களிலும் இறுதி வெற்றியாளருக்கு அடுத்ததாக வாக்குப்பெற்ற அருந்தவபாலன், அச் சந்தர்ப்பங்களில் தமிழரசுக்க ட்சியினர் மீது குற்றச்சாட்டுக்களை முன்வைப்பதை வழக்கமாக வைத்து ள்ளார்.
முதல் முறை தன்னுடைய வெற்றி யினை சிவஞானம் சிறிதரனுக்கு அன்றைய யாழ்.தெரிவத்தாட்சி அலு வலர் குகநாதன் மாற்றி வழங்கியதாக குற்றம் சாட்டிய அருந்தவபாலன், இர ண்டாவது முறை நாடாளுமன்றத் தேர்தலில் நாடாளுமன்ற உறுப்பினர் ஈ.சரவணபவன் வாக்கு மோசடியில் செயற்பட்டதாக இரண்டு சந்தர்ப்பங்க ளில் தமிழரசுக்கட்சி மீது சரமாரிக் குற்றச்சாட்டுக்களைச் சுமத்தி வந்தார்.
இச் சந்தர்ப்பங்களில் தமிழரசுக்கட்சிக்கு எதிராக உண்மை யான தேசிய நலனில் பற்றுடன் செயற்படு வார் என நம்பிய புலம்பெயர் அமைப்புக்கள் சில அவருக்கு பொருளாதார ரீதியிலும், பிற வழிகளி லும் உதவிகள் புரிந்திருந்தமை தொடர்பிலும் வெளி க்காட்டியுள்ளது.
அவ்வாறான உதவிகளைப் பெற்ற அருந்தவபாலன் இறுதி நேரத்தில் உதவி புரிந்தவர்களின் தொடர்புகள் அனைத்தையும் துண்டித்து விட்டு தமிழரசுக்க ட்சியின் விசுவாசியாக தன்னைக் காட்டிக்கொண்டு செயற்படத் தலைப்பட்டு உள்ளார்.
இந்த நிலையிலேயே, நேற்று மாகாணசபை உறுப்பினர் கேசவன் சயந்தன் வேட்பாளர் பட்டியலில் அருந்தவபாலனின் விசுவாசிகளை தவிர்த்து வேட்பு மனுத்தாக்கல் செய்தமை அருந்தவபாலனை மீண்டும் பழைய நிலைக்கு வழி வகுத்துள்ளது.
வழமையான பாணியில் புலம்பத் தொடங்கிய அருந்தவபாலன் தனது அணி யுடன் இணைந்து தேர்தலைப் புறக்கணிக்கப் போவதாக தெரிவித்துள்ளமை சிறுபிள்ளைத் தனமான செயற்பாடு என்பது குறிப்பிடத்தக்கது.