Breaking News

விசுவமடுவில் தனியார் கல்வி நிலையம் ஒன்று தீக்கிரை - கிளிநொச்சி !

கிளிநொச்சி விசுமடு பகுதியில் தனியார் கல்வி நிலையம் ஒன்று நேற்று (10) இரவு தீக்கிரையாக்கப்பட்டுள்ளது.  

குறித்த ஆசிரியரின் தவறான நட த்தையால் குறித்த தனியாா் கல்வி நிலையம் தீக்கிரையாக்கப்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. குறி த்த தனியாா் கல்வி நிலையத்தில் கல்வி கற்பிக்கும் ஆசிரியர் ஒருவர் அங்கு கல்வி கற்ற மாணவியிடம் தகாத முறையில் நடக்க முயற்சித்து ள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 

இச் சம்பவம், நேற்று முன்தினம் (09) நடைபெற்றதாகவும் நேற்று குறித்த ஆசி ரியரை ஊர்த்தலைவர்கள் முன்னிலையில் விசாரணைக்கு வருமாறு அழை த்துள்ளனர். எனினும், குறித்த ஆசிரியர் விசாரணைக்கு சமூகமளிக்க மறுத்து ள்ளதினால் விசுமடு பகுதியிலுள்ள குறித்த தனியார் கல்வி நிலையம் நேற்றி ரவு அடையாளம் தெரியாத நபர்களினால் தீ மூட்டப்பட்டுள்ளது.

 சம்பவம் தொடர்பில் தகவல் வழங்கப்பட்டதை தொடர்ந்து, சம்பவ இடத்திற்கு விரைந்த பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர். இதே வேளை இதுபோன்று விசுவமடுவில் பல தனியார் கல்வி நிலையங்களில் குறித்த ஆசிரியரால் துஸ்பிரயோகங்கள் இடம்பெறுவதாக அப்பகுதி மக்கள் தெரிவித்துள்ளனர்.