தவராசாவின் பதவிக்கு மீளவும் நெருக்கடியாம் - ஈ.பி.டி.பி !
வடக்கு மாகாண எதிர்க்கட்சித் தலைவர் சி.தவராசாவின் தலைவர் பதவியைப் பறிப்பதில் ஈ.பி.டி.பி. தொடர்ந்தும் முனைப்பு வடக்கு மாகாண சபையில் எதி ர்க்கட்சித் தலைவராக ஈ.பி.டி.பி. கட்சியைச் சேர்ந்த தவராசா தற்போது வரை அப் பதவியியை வகித்துக்கொண்டிருக்கின்றார்.
உட்கட்சி முரண்பாடு காரணமாக குறி த்த பதவியினை தவராசாவிடம் இரு ந்து பறித்து கிளிநொச்சி மாவட்ட ஈ.பி. டி.பி. உறுப்பினர் தவநாதனுக்கு வழ ங்க முயற்சிக்கப்பட்ட நிலையில் அந்த முயற்சி தோல்வி அடைந்து தவராசா எதிர்க் கட்சித் தலைவராகத் தொடர்கின்றார்.
இந்த நிலையில் ‘‘கட்சியின் கட்டுப்பாட்டையும் முடிவையும் மீறித் தொடர்ந்தும் குறித்த பதவியில் இருக்கும் தங்களுக்கு எதிராக ஏன் ஈ.பி.டி.பி. கட்சி நடவடிக்கை மேற்கொள்ளக் கூடாது? என்பதற்கு விளக்கமளிக்க வேண்டும்’’ என தவராசாவிடம் அந்தக் கட்சியின் நிர்வாகச் செயலாளர் மணிபல்லவராயன் ஒப்பமிட்டு கடிதமொன்றை சமர்ப்பித்துள்ளார்.
குறித்த விளக்கக் கடிதத்துக்கு பதிலளித்த வடக்கு மாகாண எதிர்க் கட்சித் தலைவர், ‘‘ஈ.பி.டி.பி. கட்சியின் யாப்பிலோ அல்லது கட்சியின் வருடாந்த மாநாடுகளிலோ நிர்வாகச் செயலாளர் என்னும் பொறுப்பு பரிந்துரைக்கப்படவில்லை.
எனவே அவ்வாறான பதவியின் மூலம் கேள்வி கோரும் உரித்துக் கிடையாது’’ எனப் பதிலளித்து இம்முறையும் சட்ட ரீதியில் தப்பித்துக்கொண்டார்.வடக்கு மாகாண சபையின் ஆயுள் காலத்துக்கு இன்னமும் 9 மாதங்களே உள்ள நிலையிலும் எதிர்க்கட்சித் தலைவர் பதவியும் தொடர்ந்து சர்ச்சைக்குள் சிக்கி யுள்ளது.