முன்னாள் ஜனாதிபதி மஹிந்தவிற்கு பாதுகாப்பு வேண்டுமாம் !

உள்ளூராட்சி சபைத் தேர்தலில் பொது ஜன பெரமுன கட்சிக்காக பிரச்சார ங்களில் ஈடுபட்டு வரும் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ நாட்டின் சகல பகுதிகளிலும் மக்கள் சந்திப்புக் களில் ஈடுபட்டு வருகின்றார். இந்நிலையில் தமது அணியினருக்கும் தன க்கும் தொடர்ந்தும் அச்சுறுத்தல் காணப்படுவதாகவும் தமக்கு வழங்கப்பட்டு ள்ள பாதுகாப்பை மேலும் அதிகரிக்குமாறு மஹிந்த தரப்பின் அணியினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.