Breaking News

புலி­க­ளுக்கு முன்­னு­ரிமை இரா­ணு­வத்­துக்கு இல்லை ; கப்டன் தச­நா­யக்­கவின் மகள் மஞ்­சரி விசனம்

எனது தந்­தை­யான கப்டன் கே.பி. தச­நா­யக்­கவை அநீ­தி­யான முறையில் கைது­செய்து தடுத்­து­ வைக்கப்பட்டுள்ளார்.

அவர் தொடர்­பாக இலங்கை வந்த ஐ.நா.செயற்­கு­ழு­விடம் நான் முறை ப்­பாடு செய்ய வந்­த­போதும் எனது முறைப்­பாட்­டை அவர்கள் ஏற்­றுக்­கொள்­ள­வில்லை. 

புலி தரப்­பாக இருந்தால் ஏற்­றுக்­கொள் ­வ­தா­கவும், இரா­ணுவ தரப்­பாக இரு ந்தால் ஏற்­றுக்­கொள்ள முடி­யாதென வும் என்­னிடம் தெரி­வித்­து ­விட்­டதாக விளக்­க­ம­றி­யலில் வைக்­கப்­பட்­டுள்ள கடற்­படை அதி­காரி கப்டன் கே.பி.தச­நா­யக்­கவின் மகள் மஞ்­சரி தச­நா­யக்க தெரி­வித்துள்ளார். இலங்கை வந்த தன்­னிச்­சை­யாக தடுத்­வைத்தல் தொடர்­பாக ஆராயும் ஐ.நா. செயற்­குழு பிர­தி­நி­திகள் நேற்று கொழும்பு பண்­டா­ர­நா­யக ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்­டப குழு அறையில் இலங்கை விஜயம் தொடர்­பாக விளக்­க­ம­ளிக்கும் செய்­தி­யாளர் சந்­திப்பை நடத்­தினர். 

செய்­தி­யாளர் சந்­திப்பு முடி­வ­டைந்­ததும் ஊட­க­வி­ய­லா­ளர்கள் குழு அறை­யி­லி­ருந்து வெளியே வந்­த­போது கடற்­படை அதி­கா­ரியின் மகள் மஞ்­சரி தச­நா­யக்க அங்கே நின்­று­கொண்­டி­ருந்தார். 

 இதன்­போது அவர் மேலும் ஊட­கங்­க­ளிடம் கருத்து வெளி­யி­டு­கையில், ஒவ்­வொரு முறையும் ஐ.நா. பிர­தி­நி­திகள் வரும்­போது நான் எனது தந்­தைக்கு இழைக்­கப்­பட்­டுள்ள அநீதி தொடர்பில் முறை­யி­டு­வ­தற்கு வருவேன். ஆனால் அவர்கள் அதனை ஏற்­றுக்­கொள்ள மாட்­டார்கள். 

இதற்கு முன்னர் இலங்கை வந்த ஐ.நா. அதி­காரி பென் எமர்சன் எனது தந்­தை யின் கைது தொடர்பில் மகிழ்ச்­சி­ய­டை­வ­தாக கூறி­யி­ருந்தார். என்­னு­டைய தந்தை குற்­றச்­சாட்­டுக்கள் இன்றி சிறையில் வைக்­கப்­பட்­டுள்ளார். தற்­போது 5 மாதங்­க­ளாக அவர் சிறையில் உள்ளார்.

இந்­நி­லையில் இலங்கை வந்த ஐ.நா. குழு­வினர் புலிகள் இருந்த சிறைக்­கூ­டங்­களை சென்று பார்த்­தனர். ஆனால் எனது தந்தை தடுத்­து­வைக்­கப்­பட்­டி­ருக்கும் வெலிக்­கடை சிறைச்­சா­லைக்குச் செல்­ல­வில்லை. இரா­ணுவ வீரர்­களை இவ ர்கள் சென்று பார்க்­க­வில்லை. 

அது­மட்­டு­மன்றி நான் இவர்­க­ளிடம் எனது முறைப்­பாட்டை தெரி­விக்­க­வந்தேன். ஆனால் அத­னையும் ஏற்­றுக்­கொள்­ள­வில்லை. இலங்கை அதி­காரி ஒரு­வரை அனுப்பி எனது முறைப்­பாட்டை பெற்­றுக்­கொண்­டனர். 

ஆனால் அது உரிய இடத்திற்கு செல்லுமோ என்று தெரியவில்லை. என்னிடம் முதலில் வந்து புலி தரப்பா? என்று கேட்டனர். நான் இல்லை இராணுவ தரப்பு என்றேன். உடனே எனது முறைப்பாட்டை ஏற்காமல் சென்றுவிட்டனர் எனத் தெரிவித்துள்ளார்.