அலரி மாளிகைக்கு அதிபர்கள் – ஆசிரியர்களை அழைத்தமைக்கு ஆசிரியா் சங்கம் கண்டனம்!
உள்ளூராட்சிமன்ற தேர்தல் குறித்து ஆலோசிக்க பாடசாலை அதிபர்கள் அலரி மாளிகைக்கு அழைக்கப்பட்டமை சட்டத்துக்கு முரணானதாக இலங்கை ஆசி ரியர் சேவை சங்கம் கண்டனம் தெரிவித்துள்ளது.
தேர்தல் நடவடிக்கைகளை கலந்தா லோசிப்பதற்காக ஆசிரியர்கள் சிலர் நேற்று முன்தினம் அலரி மாளிகை க்கு அழைக்கப்பட்டிருந்தனர்.
பணி நிமித்தம் அவர்களை ஒன்று கூட்ட வேண்டுமாயின் கல்வி அமைச்சிலோ அல்லது உயர் பாடசாலை ஒன்றிலோ மேற்கொண்டு இருக்கலாம்.
ஆனால், மாறாக அவர்கள் அலரி மாளிகைக்கு அழைக்கப்பட்டமையானது தேர்தல் ஒழுங்கு விதிமுறைகளை மீறும் செயல் என ஆசிரியர் சங்கம் தெரிவி க்கையில் மேலும், குறித்த விசாரணைகளை துரிதமாக முன்னெடுக்குமாறும் ஆசிரியர் சங்கம் வேண்டுகோள் விடுத்துள்ளது.