கஜேந்திரகுமார் ஆதரவாளர்களை நோக்கி ஒரு பகிரங்க மடல்!
மதிப்புக்குரிய தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியின் ஆதரவாளர்களுக்கு!
திரு. கஜேந்திரகுமார் அவர்களின் 2016 ம் ஆண்டு, தமிழீழ தேசிய மாவீரர் நாள் நிகழ்வினை த.தே.ம. முன்னணி யினர் மாற்றியமைக்கான விளக்க வுரைக் காணொலி (பிந்திக்கிடைத்த) தொடர்பாக தொலைபேசியூடாகவும் முகநூலினூடாகவும் பலர் என்னுட னும் பொது வெளியிலும் பகிர்ந்து கொண்டிருக்கும் விடயங்கள் தொடர்பான எனது நிலைப்பாட்டு மடல் இது.
தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியினர் ஏற்றுக்கொள்வதைப் போலவும் திரு கஜேந்திரகுமார் அவர்கள் ‘விளக்குவதைப்போலவும்’ 2016 ம் ஆண்டு தமிழீழ தேசிய மாவீரர் நாள் நிகழ்வை தனியே தமிழீழ விடுதலைப்புலிகள் அமைப்பி லிருந்து வீரச்சாவடைந்த மாவீரர்களுக்கான நிகழ்வாக மட்டும் அனுஷ்டித்தி ருந்தால்,
இலங்கை அரச புலனாய்வுப் படைகளால் தமிழ்த்தேசிய மக்கள் முன்னணி தடைசெய்யப்பட்டிருக்கவோ அல்லது திரு.கஜேந்திரகுமார் உட்பட கட்சி உறு ப்பினர்கள் கைது செய்யப்படலாம் எனும் அச்சம் காரணமாகவோ அந்நிக ழ்வை போரில் உயிரிழந்த எல்லோருக்குமான (மாற்றுக்கட்சி அமைப்புகள் உட்பட) நிகழ்வாக அனுஷ்டிக்க அமைப்பு மட்டத்தில் திரு கஜேந்திரகுமாரின் கட்சி முடிவெடுத்தமையினை நானும் உங்களுடைய கண்ணோட்டத்தின் படியே ஏற்றுக்கொள்கிறேன் எனில் இங்கு எனக்கு ஒரு முக்கியமான கேள்வி எழுகிறது.
தமிழத் தேசிய மக்கள் முன்னணி ஆதரவாளர்கள் எனக்கு தந்த விளக்கத்தின் அடிப்படையில்(“2016 ஆம் ஆண்டு தீடிரெனதான் மாவீரர் நாள் செய்ய அனு மதிக்கப்பட்டார்கள் இல்லையா? அந்த பின்னனியில் தான் அதை பார்க்கி றேன்.
அதனை அவர் தெளிவாக சொல்லியிருக்கிறார்”)
திடீரென அனுமதிக்கப்பட்ட மாவீரர் தின நிகழ்வில் விடுதலைப்புலிகள் அமைப்பி லிருந்து வீரச்சாவடை ந்த மாவீரர்களை நினைவு கூருவதில் அரசியல் கட்சியாகவும், ஓர் சட்டத்தர ணியாகவும், ஐ.நா சபை வரை அறிமுகமான திரு கஜேந்திரகுமார் அவர்களு க்கே இலங்கை அரசினால் ஆபத்தான நிலை வரும் என ஊகித்தறிந்த நிலை யில்..
2016 ம் ஆண்டு தமிழீழ தேசிய மாவீரர் நாள் நிகழ்வில் கிளிநொச்சி கனகபுரம் மாவீரர் துயிலுமில்லத்திலோ அல்லது முழங்காவில் மாவீரர் துயிலுமில்ல த்திலோ ஒரு மாவீரனின் தாய், தந்தை, உறவினர், துணைவி என யாராவது ஒருவர் பொதுச்சுடர் ஏற்றியிருந்தால் அவர்களுக்கு எதிர்காலத்தில் ஏற்பட ப்போகும் ஆபத்துக்களை முன் கருத்திற்கொண்டு திரு சிறீதரன் அவர்களோ அல்லது திரு மாவை சேனாதிராசா அவர்களோ பொதுச்சுடர் ஏற்றியிருக்க லாம் அல்லவா..
அதெப்படி திரு கஜேந்திரகுமார் எடுத்த முடிவு இராச தந்திரமாகவும் மற்ற வர்கள் எடுத்த முடிவு அநாகரீகமாகவும் தங்களுக்கு இற்றைவரை வெளி ப்பட்டிருக்கிறது. அவ்வாறே திரு.கஜேந்திரகுமார் பொன்னம்பலத்தின் இந்நிலைப்பாடானது இராசதந்திர நகர்வாக நியாயப்படுத்தப்படும் பட்சத்தில் தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் உருவாக்கத்திற்கும் விடுதலைப்புலிகளு க்கும் தொடர்பேதும் இருந்தாக நான் அறிந்திருக்கவில்லை என கூட்ட மைப்பின் தலைவர் திரு இரா. சம்பந்தன் அவர்கள் கூறிவரும் கருத்துக்களை யும் இராசதந்திர ரீதியில் வெண்மைப்படுத்தி பார்த்துவிட முடியுமா?
சரி இதனடிப்படையிலேயே இன்னொரு விடயத்தையும் இங்கு ஒப்பிட்டுப் பார்க்கலாம் 2010 ம் ஆண்டு இலங்கை பாராளுமன்ற தேர்தலின் பின்நாட்களில் தமிழ்த்தேசியக்கூட்டமைப்பில் அங்கம் வகித்த கட்சிகளின் ஒத்து இயங்கு நிலையற்ற தன்மையும் இலங்கை தமிழரசுக்கட்சி சார்ந்த பாராளுமன்ற உறுப்பினர்கள் சிலரின் தான்தோன்றித்தனமான தமிழ்த்தேசிய கொள்கைவழி முரண் அரச சார்பு நிலைப்பாட்டின் அடிப்படையிலும்,
சர்வதேச அளவில் தமிழ்த்தேசிய நிலைப்பாட்டோடு இயங்கும் தமிழ் அமை ப்புக்களின் நம்பிக்கை யாக பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட பாராளுமன்ற உறு ப்பினர் சிறீதரன் போன்றோ ரின் கட்சித்தலைமை விசுவாச நிலைப்பாடு துரோகங்களாகப் பின் நாட்களில் பார்க்கப்பட, தமிழ்த்தேசிய கூட்டமை ப்பிலிருந்து பிரிந்து சென்று வெளியில் நின்ற தமிழ்த்தேசிய மக்கள் முன்னணி புலம்பெயர் தமிழர் அமைப்புக்களின் நம்பிக்கையை பெற ஆரம்பித்தது.
தொடர்ச்சியாக நிகழ்ந்தேறுகின்ற இலங்கைத் தமிழரசுக்கட்சியினரின் தமிழ ர்களின் கொள்கை வழி தவறிய, அரசுடன் இணைந்த இணக்க அரசியல் செய ற்பாடுகள் தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியினருக்கு புலம்பெயர் அமை ப்புகள் சிலவற்றின் கண்மூடித்தனமான ஆதரவை பெருகச் செய்திருக்கிறது எனலாம்.
இந்நிலைமை இவ்வாறிருக்கையில் தமிழீழத்தேசிய மாவீரர் நாளினை விடு தலைப்புலிகளின் அமைப்பிலிருந்து வீரச்சாவடைத்த மாவீரர்களுக்கான நிகழ்வாக மட்டும் அனுஷ்டித்திருக்கும் பட்சத்தில் த.தே.ம.முன்னணி இல ங்கை அரசினால் தமக்கு ஏற்பட்டிருக்குமென ஊகிக்கப்பட்ட ஆபத்துக்களை,
திரு.கஜேந்திரகுமார் அவர்கள் புலம்பெயர் நாடுகளுக்குச் சென்று தமிழர் அமைப்புக்களுடனான தனியான சந்திப்புக்களை மேற்கொண்ட போதோ அல்லது தொடர்ச்சியாக புலம்பெயர் அமைப்புக்களிடமிருந்து இற்றைநாள் வரை கட்சி நடவடிக்கைகளுக்காக நிதிகளைப் பெறுகின்ற போதோ அவ் ஆபத்துக்கள் தொடர்பில் ஆராயாமல் விட்டதன் பின்னணி என்ன?
திரு.கஜேந்திரகுமார் அவர்கள் தமது அமைப்பு ரீதியாகவே அம் முடிவு எடுக்க ப்பட்டதாக காணொலியில் கூறும் இக்கருத்தானது அண்மைக்காலமாக இல ங்கையில் தமிழர் அரசியல் களத்திலிருந்தும் கட்சிகளிலிருந்தும் முற்று முழு தான புலிநீக்கம் செய்ய முற்படும் இலங்கை அரசினதும் சில சர்வதேச நாடு களினதும் முயற்சிகளுக்கு வலுச்சேர்ப்பதாகவே அமைந்திருக்கிறது.
திரு.கஜேந்திரகுமார் அவர்களின் இக் கருத்தை அல்லது செயலை தமிழரசு க்கட்சியினர் யாராவது சொல்லியிருந்தால் அல்லது செய்திருந்தால் நிலைமை எவ்வாறு அமைந்திருக்கும் அல்லது பல சந்தர்ப்பங்களில் எவ்வாறு அமைந்திருந்தது என்பதனை இங்கு சிந்தித்துப் பார்க்கிறேன்..
தமிழர் அரசியலில் கொள்கைவழி சரி பிழைகளுக்கு அப்பால் நமக்கு பிடித்த வர்கள் பிடிக்காதவர்கள் என்பதின் அடிப்படையில் விமர்சனங்கள் முன்வைக்க ப்படுகின்றனவோ என்கிற ஆதங்கம் எனக்கு எப்போதும் உண்டு.
அதனை இக்காணொலிக்கான சிலரின் ஆதரவு மெய்பிப்பதாக அமைவது வருத்தமளிக்கிறது.
திரு கஜேந்திரகுமாரின் இத்தெளிவுபடுத்தல் காணொலி அவரின் கொள்கை ரீதியான தெளிவின்மையைக் காட்டுவதாகவே நான் கருதுகிறேன்.
சரி பிழைகளை ஆராயவோ அல்லது நிதானிக்கவோ முற்படாமல் கண்மூடி த்தனமாக எதிர்ப்பதும் அல்லது ஆதரிப்பதுமானதுமான நிலமையே தமிழர் அர சியல் களத்தில் குப்பை மேடுகள் அதிகமாகிக்கிடக்க காரணமாக அமைந்திரு க்கின்றன.
ஓர் சினிமாக்காரனுக்கு இருக்கும் குருட்டுத்தனமான ரசிகனைப் போல தமிழர் தேசிய அரசியல் பயணத்திலும் அரசியல்வாதிகளுக்கு எம்மில் சிலர் குருட்டு த்தனமான ரசிகர்களாயிருப்பது வேதனையளிக்கிறது.
தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியின் இச் செயற்பாடானது எமது உரிமைப்போரில் தமது இன்னு யிர்களை ஈகம் செய்த ஒட்டுமொத்த மாவீரர்களையும் தேசிய விடுதலை ப்போராட்டத்தையும் அவமதிப்பதாகவே அமைந்திருக்கிறது.
தமிழீழத்தேசிய விடுதலைப்போராட்டத்தின் அங்கங்களை கொச்சைப்படு த்தும் எவராலும் தமிழ்த்தேசிய நலனில் இதயசுத்தியுடன் செயற்பட முடியாது என்பதே நிதர்சனம்.
அன்பிற்குரிய த.தே.ம.மு ஆதரவாளர்களே!, கட்சி உறுப்பி னர்களே!,
உங்களையோ அல்லது உங்களின் தலைமையையோ துரோகக் கூண்டில் ஏற்றவோ அல்லது வெறும் விமர்சனத்திற்காகவோ இம்மடல் எழுதப்பட வில்லை. எம்மை நாமே சீர்தூக்கிப் பார்க்க வேண்டி எழுதும் ஓர் மனுவாக இம்மடலைப் பார்ப்பீர்கள் என்றே நம்புகிறேன்.
வெறுமனே கட்சிக்கோசங்களிற்குப் பின்னால் அணிதிரளாமல் தமிழ்த்தேசிய மாறாக் கொள்கைகளுடன் கட்சியையும் அதன் தலைமையையும் இதய சுத்தியுடன் வழிநடத்துவீர்கள் என நம்புகிறேன்.
“என்னதான் மூடி மறைத்தா லும் முளைத்தெழும் விதைகளைப்போல காலம் துரோகிகளையும் தியாகி களையும் அடையாளம் காட்டிக்கொண்டேயிருக்கும்”