Breaking News

தீர்வு கிடைக்குமென நம்பிக்கை இல்லையாம் - சித்தார்த்தன்!

தமிழ் மக்களின் தேவைகளை கோரி க்கைகளை பூர்த்தி செய்யக்கூடிய ஒர் இறுதி தீர்வு கிடைக்குமென நான் நம்ப வில்லையென யாழ் மாவட்ட பாராளு மன்ற உறுப்பினரும் தமிழீழ விடு தலைக்கழகத்தின் தலைவருமான த.சித்தார்த்தன் விவரித்துள்ளார். வவு னியா கோவில்குளம் உமாமகேஸ்வ ரன் நினைவிடத்திலான ஊடக சந்தி ப்பில் மேலும் தெரிவிக்கையில்....  

வடக்கு கிழக்கிலே கிளிநொச்சி, அம்பாறை தவிர்ந்த ஏனைய மாவட்டங்களில் உள்ள பிரதேச சபைகளிற்கு எமது வேட்பாளர்கள் தமிழ்த் தேசிய கூட்டமை ப்பிலே வீட்டுச்சின்னத்தில் போட்டியிடுகின்றோம். 

தமிழ்த் தேசிய கூட்டமைப்பை மக்கள் ஆதரவளித்து பெரு வெற்றிக்கு அழை த்துச் செல்ல இருப்பது ஏன் எனில் தமிழ் மக்களின் பிரதிநிதிகளாக தமிழ் தேசிய கூட்டமைப்பு அரசுடனும் சர்வதேசத்துடனும் பேச்சுவார்த்தையை முன்னெடுத்துக் கொண்டிருக்கும் இவ்வேளையில் தமிழ் தேசிய கூட்டமைப்பு பலவீனமடையுமானால் அது தமிழ் மக்களை பலவீனமாக்கின்ற ஒரு விடய மாக அமையும். 

இங்கு எந்த கட்சியும் தமிழ் தேசிய கூட்டமைப்பு எடுக்கக்கூடிய அளவிற்கு ஆச னங்களை கைப்பற்றப்போவதில்லை. ஆகவே வாக்குகளை சிதறடித்து தமிழ் தேசிய கூட்டமைப்பின் பலத்தை குறைக்க கூடாது என்பதுதான் எங்களது கோரிக்கையாகவுள்ளது. 

இதேவேளை தமிழ் தேசிய கூட்டமைப்புக்கு எதிராகவும் முறைப்பாடுகள் இரு க்கின்றது என்பதும் எனக்கு தெரியும் .அது மட்டுமன்றி நாளாந்த விடயங்களில் கூட தமிழ் தேசிய கூட்டமைப்பு அக்கறை எடுக்கவில்லை என்ற பிரசாரம் எடு க்கப்பட்டாலும் அதில் உண்மை நிலை இல்லை. 

பிரதமர் மற்றும் ஜனாதிபதியுடன் கடும் பேச்சுவார்த்தைகள் இடம்பெற்றிரு க்கிறது. இதன் போது கடும் தொணியில் கூட சில விடயங்கள் கூறப்பட்டு ள்ளன. அரசியல் கைதிகளுடைய விடுதலை, காணி விடுவிப்பு தொடர்பான விடயங்கள் கலந்துரையாடப்பட்டதன் விளைவாக நாங்கள் எதிர்பார்த்த வேக த்தில் அமையா விட்டாலும் கூட இந்த அரசு சில விடயங்களை முன்னெடுத்து ள்ளது. 

இது எமக்கு திருப்தி அளிக்கா விட்டாலும் கூட எங்களுடைய அழுத்தத்தி னால்தான் இவையாவது நடைபெற்று வருகின்றது. எனவே நாம் தொடர்ந்து அழுத்தங்களை பிரயோகித்து வருவோம். தமிழர்களுக்கு ஆகக் குறைந்தது எந்தளவு அதிகாரத்தை வழங்கலாம் என்பதில்தான் போட்டி போட்டவாறு உள்ளார்கள். 

இன்றும் அதே நிலைமைதான் இருக்கின்றது. அதிலே எந்தவிதமான சந்தேக மும் எங்களிற்கு கிடையாது. நாங்கள் தனிப்பட்ட ரீதியில் அவர்களுடன் கதை க்கின்ற போதிலும் சரி அவர்கள் பகிரங்கமாக தெரிவிக்கின்ற அறிக்கையிலும் சரி அவர்கள் ஒற்றையாட்சி தொடர்பாக விவரித்துள்ளனர். 

வடகிழக்கு இணைப்பு, பொலிஸ், காணி அதிகரங்கள் இல்லையென்கிறார்கள். இவ்வாறான குழப்பகரமான செய்திகள் அங்கிருந்து வந்த கொண்டிருக்கி ன்றன. என்னை தனிப்பட்ட முறையில் கேட்டால் இது சரிவரும் என நான் கூற மாட்டேன். 

தமிழ் மக்களுடைய அபிலாசைகள் கோரிக்கைகளை பூர்த்தி செய்யக்கூடிய ஒர் இறுதி தீர்வு ஒன்று வரும் என்று நான் நம்பவில்லை. இருந்தாலும் இந்த நடவடிக்கைகளில் இருந்து நாமாக விலகிக்கொண்டவர்களாக இருந்தால் இன்று இருக்கின்ற சூழலில் ஐக்கிய நாடுகளினால் எடுக்கப்பட்ட தீர்மானத்தை அடியொட்டி அல்லது சர்வதேசத்தின் அழுத்தத்தின் காரணமாகவே இவை செயற்படுத்தப்பட்டு வருவதனால் வெளிநாட்டு இராஜதந்திரிகளும் கூட இதை குழப்பி விடாமல் இதனை எடுத்துச்செல்வதற்கான வழியை மேற்கொள்ளு ங்கள் என தெரிவிக்கின்றார்கள். 

ஆகவே நாங்கள் அதை மீறி நாங்களாகவே குழப்பினால் சிங்கள பேரின வாதத்திற்கு எமது விடயத்தை கையாழ்வதற்கு இலகுவாக்கி விடுவோம். ஆகவே இதனை குழப்பியடித்து விட்டுச் செல்ல முடியாதெனத் தெரிவித்து ள்ளார்.