Breaking News

தமிழ் தேசிய கூட்டமைப்பில் சிறிடெலோ இல்லை என்கிறார் - சுரேஸ் பிரேமச்சந்திரன்!

தமிழ் தேசிய விடுதலைக் கூட்டமைப்பில் சிறிடெலோ இல்லை என ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியின் தலைவர் சுரேஸ் பிரேமச்சந்திரன் விவரித்துள்ளார். 

வவுனியாவில் தமிழ் தேசிய விடுத லைக்கூட்டமைப்பின் அங்கத்தவர்க ளுக்கான கருத்தமர்வில் கலந்துகொ ண்ட அவரிடம் ஊடகவியலாளர்கள் சுதந்திரக்கட்சியுடன் போட்டியிடும் சிறிடேலோ கட்சி அங்கத்தவர்கள் உங்கள் கூட்டமைப்புடனும் இணை ந்து போட்டியிடுகின்றனரே என கேள்வி எழுப்புகையில் இவ்வாறு தெரிவித்தார். 

மேலும் தெரிவிக்கையில்.......

சிறிடெலோ கட்சியினர் இக் கூட்டமைப்பில் அங்கத்துவம் பெறவில்லை. அவர்களது அங்கத்தவர்கள் எவராவது வந்திருப்பாளர்களாக இருந்தால் அது கூட்டணியினுடைய வேட்பாளர் பட்டியலினூடாகத்தான் வந்திருக்கும். ஒவ்வொரு கட்சிக்கான சுதந்திரங்கள் உள்ளது. 

என்ற ரீதியில் புதிய கூட்டமைப்பில் சிறிடெலோ கட்சி அங்கத்துவம் பெற மாட்டாது. அவ்வாறான அங்கத்துவம் இல்லை என்பதனை மிகத்தெளிவாக கூறிக்கொள்ள விரும்புகின்றேன். அவ்வாறு வந்தவர்கள் தமிழர் விடுதலைக் கூட்டணியில் அங்கத்துவத்தினூடாக கலந்திருக்கலாம். 

அவ்வாறான கேள்விகளை ஆனந்தசங்கரியிடம் கேட்கப்படவேண்டும். இது எனக்கு தெரியாத விடயம். இது தொடர்பாக ஆனந்தசங்கரியுடன் பேச முடி யும். இந் நிலையில் உங்கள் புதிய கூட்டமைப்பு சபைகளை கைப்பற்றுமா என கேட்டபோது, எட்டு மாவட்டங்களில் தமிழர் விடுதலைக் கூட்டமைப்பு போட்டி யிடுகின்றது. 

எனவே பெரும்பாலான சபைகளை நாம் கைப்பற்றுவோம் என்ற நம்பிக்கை உள்ளது. மக்கள் மத்தியிலும் பெருமளவான ஆதரவு இருக்கின்றது. ஏற்கனவே பல மட்டங்களில் இருந்து ஆதரவுகள் கிடைக்கப்பெற்று வருகின்றது. இன்றும் ஒன்றரை மாதங்கள் தேர்தலுக்கு இருக்கும் நிலையில் எமது ஆதரவுத்தளம் பெருகும் என எதிர்பார்க்கின்றோம். 

ஆகவே வடக்கிலும் கிழக்கிலும் பல சபைகளை கைப்பற்றுவோம் என்ற நம்பிக்கை உள்ளதாக தெரிவித்துள்ளார்.