புதுக்குடியிருப்பில் ஆற்றில் மூழ்கிய உயர்தர மாணவர் இருவர் பலி !
முல்லைத்தீவு, புதுக்குடியிருப்பு கோப்பாபுலவு வீதியில் உள்ள கள்ளியடி ஆற்றில் குளிப்பதற்காகச் சென்ற மாணவர்களில் இருவர் நீரில் மூழ்கி பரிதா பகரமாக உயிரிழந்துள்ள சம்பவம் நேற்றைய தினம் மாலை நிகழ்ந்துள்ளது.
இச் சம்பவத்தில் புதுக்குடியிருப்பு மத்திய கல்லூரியில் (2019) வணிக பிரிவில் கல்வி கற்கும் புதுக்குடியி ருப்பு சிவநகரை சேர்ந்த தவராச சிங்கம் தனுசன் (வயது 17) 2019 உயிரி யல் பிரிவில் கல்வி கற்கும் சிவராசா பகீரதன் (வயது 17) ஆகிய இரண்டு மாணவர்களே பலியாகியுள்ளனர். புதுக்குடியிருப்பை சேர்ந்த 07 இளைஞர்கள் ஞாயிற்றுக்கிழமை விடுமுறை நாளினை களிப்பதற்காக இன்று மதியம் கள்ளி யடிப்பகுதியில் உள்ள ஆற்றி ற்கு குளிக்கச் சென்றுள்ளனர்.
இதன்போது இரு இளைஞர்கள் நீரில் மூழ்கி காணாமல் போயுள்ளனர். காணா மல் போனவர்களை மற்றைய இளைஞர்கள் தேடியபோது அவர்கள் இருவரும் ஆற்றின் சேற்றில் புதைந்துள்ளமை தெரியவந்துள்ளது.
இதனை தொடர்ந்து சம்பவ இடத்திற்கு விரைந்த கிராம மக்களின் துணையுடன் இருவரின் உடல்களையும் மீட்டெடுத்துள்ளனர்.
மேலும் ஆற்றுப்பகுதியில் அதிகளவான மண் எடுக்கப்பட்டுள்ளதால் ஆழமான பகுதியாகவும் அதேவேளை சேறு நிறைந்த பகுதியாகவும் காணப்பட்டுள்ளது. இதனாலே சேற்றில் இருவரும் புதைந்துள்ளதாக பிரதேச மக்கள் தெரிவித்து ள்ளார்கள்.
சம்பவ இடத்திற்கு விரைந்த புதுக்குடியிருப்பு பொலிஸார் உடலங்களை புதுக்குடியிருப்பு மருத்துவமனையில் ஒப்படைத்துள்ளார்கள். மருத்துவமனை மரண விசாரணை அதிகாரியின் விசாரணை பின் உடலம் உறவினர்களிடம் ஒப்படைக்கப்படவுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளார்கள்.
இதில் பகீரதன் என்னும் மாணவர் கடந்த வருடம் இடம்பெற்ற க. பொ. த சாதா ரண பரீட்சையில் 9A சித்திகளை பெற்ற மிகவும் திறமையான மாணவர் என்பது குறிப்பிடத்தக்கது.
கடந்த தீபாவளி நாள் அன்று முல்லைத்தீவு கடலில் மூழ்கி இரண்டு உயர்தர பிரிவு மாணவர்கள் பலியாகியுள்ளார்கள்.
இம் மாணவர்களுக்கு எமது இணையம் சார்ந்த ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவித்துக்கொள்கின்றோம்.