Breaking News

தேர்தல் காலத்து நண்பனே...! எங்கேயடா எம் தேசம் ? - செந்தூரன் (காணொளி)

தேர்தல் காலத்து நண்பனே என்ற தலைப்பில் வளர்ந்து வரும் ஈழத்து இளம் கவிஞர் வன்னியூர் செந்தூரன் கவிதை ஒன்றினை தனது முகநூலினூடாக பகீர்ந்துள்ளார். 

உணர்வுபூர்வமான வரிகளைத் தாங்கி யதாக வெளிப்படும்  கவிதை நிகழ்கா லத்து தமிழ் மக்களை தட்டியெழுப்பும் ஓர் விளிப்புணர்வுப் படைப்பாக படைக்கப்பட்டுள்ளது.  யுத்தம் ஓய்ந்து எட்டு வருடங்களைத் தாண்டினாலும் அதன் நேரடித் தாக்கங்கள், சன்னங்க ளின் நடுவே சாவோடு போராடி மீண்ட மக்களது உள்ளத்தினின்றும் அவ்வளவு எளிதில் நீங்கிவிடாது. இந்த நிலையில் தான் நாம் ஒவ்வொரு தேர்தல் பருவங்களையும் கடந்து வரு கின்றோம் என்பதை எடுத்துரைப்பதாய் செந்தூரனின் கவிதை வரிகள் உருவாகியுள்ளன. "தேரிழந்த கோவிலிலே மீண்டுமொரு தேர்தல் திருவிழா..." எனத் தொடங்கும் அந்தக் கவிதை ஆரம்பத்திலேயே ஒன்றை அழுத்திச் சொல்லியிருக்கிறது. 

அதாவது களையிழந்து போயுள்ள மண் இன்னும் சரியாக மீண்டெழவில்லை. அதில் புரையோடிப்போயிருந்த பிரச்சினைகள் இன்னமும் தீர்க்கப்பட வில்லை, ஆக்கிரமிப்பு வாழ்வு என்பது இன்னமும் தொடர்ந்துகொண்டே தான் உள்ளது. 

இவற்றின் மத்தியில் தான் ஒவ்வொரு முறையும் மக்களை மடைமாற்றிச் செல்லும் தேர்தல் காலம் தற்பொழுது வந்திருக்கின்றது. "என் தேர்தல் காலத்து நண்பனே! 

நிகழ்கால நிசப்தத்தோடு கடந்தகாலக் கனவுகள் கானல் நீராய்ப் போனதா? எங்கேயடா என் தேசம்?" எனத் தொடரும் கேள்வி வரிகள் அவ்வளவு எளி தாகக் கடந்து செல்லக்கூடியனவல்ல. 

அவற்றிற்கான பதிலைத் தேடுவதென்பதும் அவ்வளவு இலகுவான காரி யமல்ல. வாக்குறுதிகளையும் ஏமாற்று வித்தைகளையும் மட்டுமே அள்ளிச் சுமந்துவரும் தேர்தல் பருவத்தை நாம் எல்லோருமே ஒருவித போதை யாகவே எதிர்கொள்கின்றோம். 

தவறு எங்கே என்று தேடுவதற்கு முதல் நம் கைகளில் வைத்திருக்கும் கற்களை நாம் யாரை நோக்கி வீசப்போகின்றோம் என்பதில் தான் தற்போ தைய நிலை சென்று கொண்டிருக்கிறது.

 மிகுதியை செந்தூரனின் கவிதையில் செவிமடுப்போம். வாருங்கள்