Breaking News

அழிந்த தேசத்தையும் சிதைந்த மக்கள் வாழ்வையும் மீட்பதாக – மாவை

போரினால் அழிந்து போன நாட்டையும் சிதைந்துபோன மக்களையும் மீள கட்டியெழுப்ப உள்ளூராட்சி மன்றங்களின் பங்களிப்பு அவசியம். 

எதிர்வரும் உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் மக்கள் பூரண ஒத்துழைப்பு வழங்க வேண்டுமென, இலங்கை தமி ழரசுக் கட்சியின் தலைவரும் நாடா ளுமன்ற உறுப்பினருமான மாவை சேனாதிராஜா வேண்டு கோள் விடு த்துள்ளார். 

யாழ். மாவட்டம் முழுவதிலுமுள்ள உள்ளூராட்சி சபைகளில் போட்டியிடுவதற்கான வேட்பு மனுக்களை, தமிழ் தேசியக் கூட்டமைப்பு சார்பில் தமிழரசுக் கட்சி நேற்றைய தினம் தாக்கல் செய்துள்ளது.  

மாவை சேனாதிராஜா தலைமையில் நாடாளுமன்ற உறுப்பினர்களான எம்.ஏ. சுமந்திரன், தர்மலிங்கம் சித்தார்த்தன், ஈஸ்வரபாதம் சரவணபவன் உள்ளிட்ட வர்கள் இணைந்து இவ்வேட்புமனுக்களை நேற்று யாழ். மாவட்ட தெரிவத்தா ட்சி அலுவலரிடம் சமர்ப்பித்துள்ளனர். 

அதன் பின்னர் ஊடங்களுக்கு கருத்துத் தெரிவித்த போதே மாவை மேற்குறித்த வாறு தெரிவித்துள்ளார். வினைத்திறன் மிக்க வகையில் உள்ளூராட்சி மன்ற ங்களை நிர்வகிப்பதற்கு வேட்பாளர்களை நியமித்துள்ளதாகவும், அவர்களை வினைத்திறனுடன் செயற்பட வைப்பதாக மாவை தெரிவித்துள்ளார். 

 இதேவேளை, உள்ளூராட்சி மன்றங்களில் பெண் தலைமைத்துவம் குறைவாக உள்ள போதும் அனைவரும் தமது அலுவலகங்களுக்கு வருகை தந்து அமோக ஆதரவை நல்கியதாக மாவை தெரிவித்துள்ளார்.