கிளிநொச்சி மனுத்தாக்கல்: சிறிதரன் ராஜகத்தால் ஏனைய கட்சிகள் வாய்ப்பை இழந்தன!
கிளிநொச்சியில் பங்காளிக்கட்சி வேட் பாளர்களை தன்னிச்சையாக நிராகரி த்து விட்டு, தனி தமிழரசுக்கட்சி வேட் பாளர் பட்டியல் ஒன்றை சிவஞானம் சிறிதரன் நேற்றைய தினம் சமர்ப்பி த்துள்ளார். கூட்டமைப்பின் தலை மையின் முடிவிற்கு மாறாக சிறிதரன் தன்னிச்சையாக செயற்பட்டுள்ளார். ஏற்கனவே எட்டப்பட்டிருந்த இணக்க த்தை மீறி பங்காளிகளின் ஆசனங்க ளைச் சிறிதரன் வெட்டியபோது, மாவை சேனாதிராசாவின் கவனத்திற்கு உள்வாங்கப்பட்டதையடுத்து மாவை சேனாதிராசா, சிறிதரனை தொடர்பு கொண்டு பங்காளிக் கட்சிகளிற்குரிய ஒதுக்கீட்டை வழங்கவேண்டுமென அறி வுறுத்தியிருந்தார்.
இந்த நிலையில் நேற்றைய தினம் புளொட், ரெலோ இர ண்டையும் நீக்கிவிட்டு தனி தமிழரசுக்கட்சி வேட்புமனுவை சிறிதரன் தாக்கல் செய்துள்ளார்.
இதையடுத்து நேற்றிரவு தமிழரசுக்கட்சி, புளொட் தலைவர்களிற்கிடையிலான அவசர கலந்துரையாடல் நடைபெற்றது. தமது சொல்லை மீறி சிறிதரன் செய ற்பட்டுள்ளார், கிளிநொச்சியை இனி தமிழரசுக்கட்சி தனது கட்டுப்பாட்டில் எடு க்குமென மாவை சேனாதிராசா புளொட்டிடம் வாக்குறுதியளித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.