மிரட்டலுக்கு அஞ்சிய அருந்தவபாலன் ஆதரவாளர்கள்! மறுப்புக் கடிதத்தின் மர்மம்!!
வடக்கு மாகாணசபை உறுப்பினர் கேசவன் சயந்தனின் மிரட்டலுக்கு பயந்த அருந்தவபாலன் ஆதரவாள ர்கள் ஐவர் தாம் கையெழுத்திட்ட கடி தம் போலியானது எனத் தெரிவித்து சயந்தன் கொடுத்த பத்திரத்தில் கையெழுத்திட்டுள்ளனர்.
மேலும் தெரிவிக்கையில்,...
சாவகச்சேரியில் அருந்தவபாலன் – சயந்தன் தரப்பினருக்கு இடையில் கடும் முறுகல் நிலை ஏற்பட்டுள்ள சூழலில் வேட்புமனு தயாரிப்பில் குழறுபடி எனத் தெரிவித்து அருந்தவபாலன் கடும் அதிர்ப்தியுடன் வெளியேறியிருந்தார்.
அதன் ஒரு அங்கமாக தலைக்கவசத்தின் மூலம் சயந்தனை கொழுவி இழுத்தி ருந்தார் பின்னர் அதற்கு மறுப்பும் தெரிவித்திருந்தார்.
இச் சூழலில் அருந்த வபாலன் சார்பாக முன்னிறுத்தப்பட்ட வேட்பாளர்களில் ஏழு பேர் கையெ ழுத்திட்ட கடிதம் ஒன்று ஊடகங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டது.
தேர்தலைப் புறக்கணிக்கப்போவதாக நாடாளுமன்ற உறுப்பினர் மாவை சேனா திராஜாவுக்கு அந்தக் கடிதம் எழுதப்பட்டிருந்தது.
இந் நிலையில் அவசரமாக அவர்கள் அனைவரையும் சந்தித்த கேசவன் சயந்தன் கடந்த காலங்களில் தான் மேற்கொண்ட நடவடிக்கைகளை சுட்டிக்காட்டி, மிரட்டியதாகவும் அதன் பின்னர் ஏற்கனவே எடுத்துவைத்திருந்த கடிதத்தைக் காட்டி அதில் கையெழு த்திடுமாறும் வலியுறுத்தி கையெழுத்து வாங்கியிருக்கின்றார்.
இருந்த போதிலும் இருவர் அதனைப் புறக்கணித்திருப்பதாக தெரியவருகிறது.
மாறி மாறி ஊடகங்களில் செய்திகள் வெளியாகி வருகின்றமை சாவகச்சேரி யின் தமிழரசுக்கட்சி ஆதரவாளர்கள் இடையே சலசலப்பை ஏற்படுத்தி யுள்ளது.