Breaking News

கூட்டமைப்புக்குள் குழப்பம் இல்லையென்றார் - சம்பந்தன்!

தமிழ்த் தேசி­யக் கூட்­ட­மைப்­பின் பங்­கா­ளிக் கட்­சி­க­ளுக்­கி­டை­யில் முரண்­பா­டு­கள் ஏற்­பட்­டுள்­ள­தாக வெளி­யான செய்­தி­களைக் கூட்­ட­மைப்­பின் தலை­வர் இரா.சம்­பந்­தன் நிரா­க­ரித்­துள்­ளார். 

கொழும்பு ஊட­கமொன்றிற்கு வழங்­கி­ய செவ்­வி­ ஒன்றிலேயே இவ்வாறு தெரிவித்துள்ளார். அர­சி­யல் கூட்­ட­ணி­க­ளில், குறிப்­பாக வேட்­பு­ம­னுக்­களைத் தயா­ரிக்­கும் போது, இது­போன்ற விவ­கா­ரங்­கள் அசா­தா­ர­ண­மா­னவை அல்ல.

நாங்­கள் இப் பிரச்­சி­னை­களை இணக்­க­மான முறை­யில் தீர்த்­துக் கொள்­வோமெனத் தெரிவித்ததுடன் கூட்­ட­மைப்­பின் பங்­கா­ளிக் கட்­சி­க­ளின் தலை­வர்­க­ளான, புளொட் தலை­வர் சித்­தார்த்­த­னும், ரெலோத் தலை­வர் செல்­வம் அடைக்­க­ல­ நா­த­னும், வேட்­பு­ம­னுக்­கள் தொடர்­பாகத் தமிழ் அர­சுக் கட்­சி­யு­டன் கருத்து வேறு­பா­டு­கள் இருப்­பதை உறுதி செய்­துள்ள போதி­லும், தனி வழி­யில் செல்­வ­தற்கு முடி­வு­கள் எதனை­யும் மேற்கொள்ளவில்லையெனத் தெரிவித்துள்ளார்.