தமிழ்க் கட்சிகள் தனித்துவத்தை இழந்ததாக - அரசியல் விமர்சனங்கள் !
உள்ளூராட்சி சபைத் தேர்தலுடன் தமிழ் அரசியல் கட்சிகள் ஒவ்வொ ன்றும் தமது தனித்துவத்தை இழந்து விட்டதாக அரசியல் விமர்சனங்கள் எழுந்துள்ளன. தமிழ்த்தேசியக் கூட்ட மைப்பில் இருந்து சுரேஸ் பிரேமச்ச ந்திரன் தலைமையிலான ஈபிஆர்எல் எப் விலகியதால், புளொட், ரொலோ ஆகிய கட்சிகளும் தமிழரசுக் கட்சியு டன் முரண்பட்டுள்ளன. உள்ளூராட்சி சபைத் தேர்தலில் இணைந்த போட்டியி ட்டாலும் தமிழரசுக் கட்சி ஆதிக்கம் செலுத்துவதாகவும் தொகுதிப் பங்கீட்டில் தமக்கு அநீதி இழைக்கப்பட்டன புளொட், ரெலோ ஆகிய கட்சிகள் விசனம் வெளிட்டுள்ளன.
இவ்வாறு அதிருப்பதிகளுடன் இந்த கட்சிகளும் தோதலில் போட்டியிடும் நிலையில் தோதல் முடிவடைந்தவுடன் தமிழ்த்தேசியக் கூட்டமைப்பில் இரு ந்து விலகவுள்ளதாக கட்சியின் மூத்த உறுப்பினர்கள் சிலர் எச்சரிக்கையும் விடுத்துள்ளனர்.
இந்த நிலையில் தமிழரசுக் கட்சியின் மூத்த உறுப்பினர்கள் சிலர் இக் கட்சிக ளின் வேட்பாளர்களுடன் தொடர்பு கொண்டு தமிழரசுக் கட்சிக்கு சாதகமான முறையில் செயற்பட வேண்டுமென அறிவுறுத்தப்படுவதாகவும் கட்சித் தக வல்கள் வெளியாகியுள்ளன.
இது தொடர்பாக கருத்து வெளியிட்ட விமர்சகர்கள், 2009ஆம் ஆண்டு மே மாத த்திற்குப் பின்பு அரசியல் சூழலில் தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு சாதாரண கட்சி அரசியலில் ஈடுபட்டமை தவறு எனத் தெரிவித்துள்ளனர்.
வடக்கு கிழக்கு இணைந்த சுயநிர்ணய உரிமையுடன் கூடி அரசியல் தீர்வு குறி த்து தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு குறிப்பாக தமிழரசுக் கட்சி அரசாங்கத்துக்கு கடும் அழுத்தம் கொடுக்கவில்லை.
வெறுமனே ஆதரவை வழங்கியதாக விமர்சகர்கள் குற்றம் சுமத்தியுள்ளனர்.
அதேவேளை கஜேந்திரக் குமார், சுரேஸ் பிரேமச்சந்திரன் ஆகியோர் புதிய அர சியல் அணியை உருவாக்கத் தவறியமை தமிழரசுக் கட்சிக்கு அரசியல் ரீதி யான பலத்தை கொடுத்துள்ளது.
இருவரும் தமக்குள் முரண்பட்டவாறு வெவ்வேறு பிரிவுகளாக தேர்தலில் போட்டியிடுவதால் தமிழரசுக் கட்சியின் வெற்றி இலகுவாகியுள்ளதாகவும் எதிர்காலத்தில் மேலும் பல எதிர்விளைவுகளை இது ஏற்படுத்தும் வகையில் விவரிப்புக்கள் நிகழ்ந்தவாறு உள்ளன.
தமிழர் விடுதலைக் கூட்டணியின் உதயசூரியன் சின்னத்தில் முதலமைச்சர் விக்னேஸ்வரன் மாகாண சபைத் தேர்தலில் போட்டியிடுவார் என நாடாளு மன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன் நம்பிக்கை வெளியிட்டுள்ளார் ஆனால் விக்னேஸ்வரன் இதுவரை மௌனமாக உள்ளார்.
ஆகவே தேர்தலின் பின் தமிழக் கட்சிகள் மேலும் பிளவுபட்டு தனித்துவத்தை இழக்கும் நிலை ஏற்படுமென எச்சரித்துள்ள விமர்சகர்கள், இனப்பிரச்சினை தீர்க்கப்படும் வரை தேசிய இயக்கம் போன்று அனைவரும் ஒன்றினைந்து செயற்பட வேண்டுமெனவும் இல்லையேல் ஐக்கியதேசியக் கட்சி, ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி போன்ற பிரதான கட்சிகள் வடக்கு கிழக்கில் ஆதிக்கம் செலு த்தும் நிலை உருவாகுமென எச்சரிக்கப்பட்டுள்ளது.
அதேவேளை கட்சிகளிடையே ஏற்பட்டுள்ள முரண்பாடுகள். குழப்பங்கள் போன்ற காரணங்களினால் மக்கள் விரக்தியடைந்துள்ளதாகவும், தேர்தலில் வாக்களிப்பை புறக்கணிக்கும் நிலை ஏற்படலாமெனத் தெரிவிக்கப்பட்டு ள்ளது.