நிராகரிக்கப்பட்ட நபர்கள் நீதிமன்றம் செல்லலாம்.!
உள்ளூராட்சி சபைத் தேர்தலுக்கான வேட்புமனுக்கள் நிராகரிக்கப்பட்ட நபர்கள் நீதிமன்றத்தில் மீள் பரிசீலனைக்காக கோரிக்கை முன்வைக்க சகல உரிமை யும் உள்ளன.
நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தால் உரிய தொகுதிகளில் தேர்தல் பிற்போ கவும் வாய்ப்புகள் உள்ளதாக மாகா ணசபை மற்றும் உள்ளூராட்சி சபை அமைச்சர் பைசர் முஸ்தப்பா தெரிவி த்துள்ளார்.
எனினும் ஒரே நேரத்தில் தேர்தலை நடத்த வேண்டுமென்ற ஏகமனதான ஒத்துழைப்பு உள்ளதனால் தேர்தலில் எந்தச் சிக்கலும் வராதெனவும் அவர் தெரிவித்துள்ளார். கொழும்பு வெள்ளவத்தையில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்து கொண்ட அமைச்சர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.