ஐ.நா. சர்வதேச நீதிபதியின் முன் விஷமருத்தி பலியான ராணுவ கமாண்டர்!

ஐ.நா. சர்வதேச கோர்ட்டில் விசாரணை நடைபெற்று நீதிபதி தீர்ப்பு வாசி த்துக்கொண்டிருக்கையில் போர்க்குற்றவாளியாக நிரூபிக்கப்பட்ட ராணுவ கமாண்டர் விஷம் குடித்து இறந்த சம்பவம் பேரதிர்ச்சியைத் தூண்டியுள்ளது. 

கடந்த 1990-ம் ஆண்டு போஸ்சினியா -குரோஷியா இடையே நடைபெற்ற போரில் ஒரு லட்சத்திற்கும் மேலான மக்கள் கொல்லப்பட்டனர். பின் அமெ ரிக்காவின் தலையீட்டால் 1995-ம் ஆண்டு போர் முடிவுற்றுள்ளது

யுகோஸ்லாவாகிய ராணுவ கமாண்ட ராக இருந்த ஸ்லோபோடன் பரால்ஜாக் உட்பட 72 பேர் மீது 2013-ம் ஆண்டு போர்க்குற்ற விசாரணை நடைபெற்று 25 ஆண்டுகள் சிறைத்தண்டனை கிடை த்தது. தீர்ப்பு வாசிக்கும்போதே நீதிபதியின் முன் விஷம் குடித்து பலியான ராணுவ கமாண்டர்! இதனையடுத்து மேல்முறையீடு செய்யப்பட்ட வழக்கில் இறுதி தீர்ப்பானது ஐ.நா. சர்வதேச கோர்ட்டில் நேற்று வழங்கப்பட்டது. 

அப்போது ஸ்லோபோடன் போர்க்குற்றவாளி என அறிவித்து நீதிபதி தீர்ப்பு வாசித்து கொண்டிருக்கையில் எழுந்து நின்ற ஸ்லோபோடன், "நான், ஸ்லொ போடான் ப்ளாஜக், தீர்ப்பை நிராகரிக்கிறேன், நான் ஒரு போர்க்குற்றவாளி அல்ல" என்று கத்தியவாறே பையில் வைத்திருந்த ஒரு குடுவையை எடுத்து "நான் இப்பொழுது குடிப்பது விஷம்" என கூறிக்கொண்டே குடித்தார். 

குடித்த உடனே அங்கேயே மயக்கம் போட்டு விழுந்தார். உடனே நீதிபதி தீர்ப்பு வாசிப்பதை நிறுத்தி மருத்துவரை அழைத்தார். ஆனால் ஸ்லோபோடன் அத ற்குள் சிகிச்சை பலனின்றி உயிரிழந்த சம்பவம் பேரதிர்ச்சியை ஏற்படுத்தி யுள்ளது.