Breaking News

பொலிஸ்மா அதிபரின் கூற்றை நிராகரித்த சட்டம், ஒழுங்கு அமைச்சர் !

ஸ்ரீலங்கா பொலிஸார் தங்களது கடமையை சரிவர நிறைவேற்றாமையால் காலி – கின்தோட்டையில் நடைபெற்ற கலவரத்தை தடுக்க முடியாமற் சென்ற தாக பொலிஸ்மா அதிபர் பூஜித் ஜயசுந்தர தெரிவித்த கருத்தை நிராகரிப்பதாக சட்டம், ஒழுங்கு அமைச்சர் சாகல ரத்நாயக்க குறிப்பிட்டுள்ளார். 

கலவரம் இடம்பெற்ற தினத்தில் முப்ப டையினரும், பொலிஸாரும் கடமை யைச் சரிவர நிறைவேற்றியதாக அமை ச்சர் சாகல ரத்நாயக்க தெரிவித்தார். 

 கடந்த நவம்பர் மாதம் 18ஆம் திகதி காலி – கின்தோட்டையில் முஸ்லிம் – சிங்கள மக்களுக்கு இடையில் இடம்பெற்ற சிறு மோதலை தொடர்ந்து குறிப்பிட்ட குழுவினரால் அங்குள்ள முஸ்லிம் வர்த்தகர்களது வர்த்தக நிலையங்களும், வீடுகளும் சேதமாக்கப்பட்டன. 

இக் கலவரத்தை கட்டுப்படுத்த பொலிஸாரும், முப்படையினர் மற்றும் விசேட அதிரடிப் படையினரும் அங்கு குவிக்கப்பட்ட அதேவேளையில், கல வரத்தை தூண்டிய குற்றச்சாட்டில் 20 பேர் வரை கைது செய்யப்பட்டனர்.

இந்த நிலையில் அண்மையில் நடைபெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு உரையாற்றிய ஸ்ரீலங்கா பொலிஸ்மா அதிபர் பூஜித் ஜயசுந்தர, பொலிஸார் சரி வர கடமையை செய்யாததே கின்தோட்டை கலவரத்தை தடுக்க முடியாமை க்கான காரணம் எனக் குறிப்பிட்டுள்ளார்.  

மேலும் இன்றைய தினம் இடம்பெற்ற ஸ்ரீலங்கா நாடாளுமன்ற அமர்வில், ஜே.வி.பியின் தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான அநுரகுமார திஸா நாயக்க, சட்டம், ஒழுங்கு அமைச்சரிடம் வினா எழுப்பியிருந்தார்.

இதற்கு பதிலளித்த அமைச்சர் சாகல ரத்நாயக்க, “இந்த மோதல் சம்பவம் இடம்பெற்ற தினத்திலிருந்து இரண்டுநாள் கழித்து கிந்தோட்டைக்கு நானும் சென்றிருந்தேன். 

பொலிஸ்மா அதிபதின் அந்த அறிவிப்பு குறித்து முழுமையாக நான் அறிய வில்லை. இருந்த போதிலும் அவர் இப்படிப்பட்ட அறிவிப்பை விடுத்திரு ப்பதாக நாடாளுமன்ற உறுப்பினர் அநுரகுமார திஸாநாயக்க கூறுகின்றார். இதனை நான் அனுமதிக்கப்போவதில்லை. ஏற்றுக்கொள்ளவும் மாட்டேன்.

பொலிஸ்மா அப்படியொரு விடயத்தை தெரிவித்திருந்தால் அதற்கு நான் இணங்கமாட்டேன். அந்த தினத்தில் தங்களது கடமையை பொலிஸ் அதி காரிகள் சரிவர நிறைவேற்றியதினால்தான் நிலைமையை கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவர முடிந்தது. 

பொலிஸார் மட்டுமன்றி அவர்களுக்கு உதவியாக முப்படையினரும் சென்றி ருந்தனர். அனைவரும் அந்நாளில் கடமையை நிறைவேற்றியதினால்தான் அந்த இடத்திலும், நாட்டின் வேறு பகுதிகளிலும் பரவிச்செல்லவிருந்த சம்ப வங்கள் தடுக்கப்பட்டன. 

முப்படையினரும், பொலிஸாரும் செய்த கடமையை நான் இங்கு பாராட்டு கின்றேன்” எனத் தெரிவித்துள்ளார்.