ஆயுதமுனையில் வங்கியில் பணம் பறி - வாடிக்கையாளர் காயம்
தங்காலை – குடாவெல்லையிலுள்ள அரச வங்கி ஒன்றில் பெருந்தொகைப் பணம் பறி தொடர்பில் பொலிஸார் தெரிவிக்கையில்....
கொள்ளையர்கள் மேற்கொண்ட துப்பாக்கிப் பிரயோகத்தில் வாடிக்கை யாளர் ஒருவர் காயமடைந்த நிலை யில் தங்காலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலி ஸார் மேலும் தெரிவித்துள்ளனர்.
இச் சம்பவம் இன்று காலை நடை பெற்றதுடன் முகத்தை மூடிக்கட்டிய வாறு மோட்டார் சைக்கிளில் வந்த இருவர் குறித்த அரச வங்கிக்குள் நுழைந்து ள்ளனர். இரு கொள்ளையர்களும் ஆயுதமுனையில் வங்கியில் இருந்து சுமார் 50 இலட்சத்திற்கும் அதிகமான பணத்தை கொள்ளையிட்டு விட்டு தப்பிச் சென்றுள்ளனர்.
இந்நிலையில் கொள்ளையர்கள் சம்பவ இடத்திலிருந்து தப்பி ச் செல்வதற்கு முன்னர் துப்பாக்கிப் பிரயோகத்தை மேற்கொண்டுள்ளனர்.
இதனால், வங்கிக் கொடுக்கல் வாங்கல் நடவடிக்கைக்காக வந்திருந்த வாடி க்கையாளர் ஒருவர் காயமடைந்த நிலையில் தங்காலை வைத்தியசாலை யில் அனுமதிக்கப்பட்டுள்ளார். குறித்த கொள்ளைச் சம்பவம் தொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.