Breaking News

முற்றவெளி பூதவுடல் தகன விடயத்தில் முதலமைச்சர் மீது குற்றச்சாட்டு - சி.தவராசா !

யாழ்.முற்றவெளியில் விகாராதிபதியின் பூதவுடல் தகனம் செய்யப்பட்டமை க்காக அரசாங்கத்தினை குற்றம் சுமத்துவது ஆபத்தானது. 

முற்றவெளியில் பூதவுடல் தகனம் செய்யப்படாமல் தடுத்திருக்க  வேண் டிய பொறுப்பு வடமாகாண முதல மைச்சர் சீ.வி.விக்னேஷ்வரனுக்கும், யாழ். மாநகர சபை ஆணையாளரு க்கும் உரிய கடமையென  வடமாகா ணசபை எதிர்க்கட்சித் தலைவர் சி. தவராசா குற்றம் சுமத்தியுள்ளார். 

யாழ்.ஆரியகுளம்- நாகவிகாரையின் விகாராதிபதி இயற்கை எய்திய நிலை யில் அவருடைய பூதவுடல் யாழ்.முற்றவெளியில் தகனம் செய்யப்பட்டது. இவ் விடயம் தொடர்பாக ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும்போதே எதி ர்க்கட்சித் தலைவர் மேற்கண்டவாறு வழங்கியுள்ளார்.  

மேலும் தெரிவிக்கையில் ......

ஆரியகுளம் நாகவிகாரையின் விகாராதிபதி இயற்கை எய்திய நிலையில் அவருடைய பூதவுடல் யாழ்.முற்றவெளி மைதானத்தில் தகனம் செய்ய ப்பட்டது. இந்த சம்பவம் தொடர்பாக நல்லாட்சி அரசாங்கத்தின் மீது சரமாரி யான குற்றச்சாட்டுக்களை மக்களும், ஊடகங்களும், சமூக வலைத்தளங்க ளும் முன்வைத்துள்ளன.  

ஆனால் இருக்கும் உண்மை வேறு. விகாராதிபதியின் பூதவுடல் தகனம் செய்யப்படுவது தொடர்பாக முதலமைச்சர் சீ.வி.விக்னேஷ்வரன் அல்லது யாழ்.மாநகரசபை நடவடிக்கை எடுத்திருக்க முடியும். 

அதாவது முற்றவெளி மைதானம் தொல்லியல் திணைக்களத்திற்கு சொந்த மானதாக இருக்கலாம். ஆனாலும் அந்த மைதான வளாகத்தில் வைத்து இற ந்த ஒருவரின் உடலை தகனம் செய்வதற்கு நிச்சயமாக யாழ்.மாநகர சபை யிடம் ஒப்புதல் பெற்றிருக்கவேண்டும். 

காரணம் மயானங்கள் சம்மந்தமான சட்டங்கள் உள்ளூராட்சி சபையிடம் இரு க்கின்றது. எனவே உள்ளூராட்சி அமைச்சர் என்ற அடிப்படையில் வடமாகாண முதலமைச்சர் சீ.வி.விக்னேஷ்வரன் தனது அதிகாரிகளுக்கு உத்தரவு கொடு த்திருக்க வேண்டும் அல்லது யாழ்.மாநகர சபை நீதிமன்றத்தை நாடி தடுத்தி ருக்க வேண்டும் என்றார். 

எனவே பிழைகளை நம்மிடம் வைத்துக் கொண்டு மற்றவர்களை குற்றம் காண்பது மிக பிழையான ஒரு நடவடிக்கையாகும். முதலில் நாங்கள் எங்களை திருத்தி கொள்ள வேண்டும். 

வெறுமனே அறிக்கை விடுவதிலும் கேள்விகளுக்கு பதிலளிப்பதாலும் ஆவது ஒன்றுமில்லை எனவே மக்களும் சரி, சமூக வலைத்தளங்களும் சரி, ஊடக ங்களும் சரி, உண்மையை சரியாக உணர்ந்து கொள்ள வேண்டும். 

அதனை செய்யாமல் அரசை எதற்கெடுத்தாலும் குற்றஞ்சாட்டுவதால் எந்த பயனும் இல்லை. நாங்கள் தடுத்திருக்கலாம் தடுக்கவில்லை. இதற்கு பிறகு மற்றவர்களை எப்படி குறை காண முடியும்? குற்றம் சொல்ல முடியும்? என்றார்.