Breaking News

யாழ்.போதனா வைத்தியசாலையில் முதல் தடவையாக திறந்த இருதய சத்திர சிகிச்சை!

யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் முதல் தடவையாக நடாத்தப்ப ட்ட திறந்த இருதய சத்திரசிகிச்சை வெற்றிகரமாக முடிவடைந்துள்ளது. 

சிகிச்சையைத் தொடர்ந்தும் முன்னெ டுத்துச் செல்வதற்கான வசதிகள் குறைவாக இருப்பதால் சுகாதார அமைச்சு இதற்கான நடவடிக்கை களை முன்னெடுக்க வேண்டுமென வைத்திய நிபுணர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

யாழ்ப்பாணம் போதனா வைத்தியசா லையில் திறந்த இருதய சத்திரசிகிச்சை முதன் முறையாக இருவருக்கு வெற்றிகரமாக முன்னெடுக்கப்பட்டுள்ளது. இது தொடர்பில் தெளிவுபடுத்தும் முகமாக யாழ்.போதனா வைத்தியசாலையில் இன்று ஊடகவியலாளர் சந்திப்பொன்று நடாத்தப்பட்டுள்ளது. 

வடமாகாணத்திலுள்ள வைத்தியசாலைகளில் சத்திரசிகிச்சை பிரிவு இது வரை இல்லாத காரணத்தினால் மக்கள் வேறு மாவட்டங்களுக்கு செல்ல வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்பட்டதாக யாழ்.போதனா வைத்தியசாலையின் இதய சிகிச்சை நிபுணர் குருபரன் சுட்டிக்காட்டியுள்ளார். 

திறந்த இருதய சிகிச்சையினை தொடர்ந்தும் நகர்த்துவதற்கான வசதிகள் குறைவாக இருப்பதால் சுகாதார அமைச்சு இதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டுமென சத்திர சிகிச்சை நிபுணர் நாதன் முகுந்தன் தெரி வித்துள்ளார்.