சிறுகதை எழுத்தாளரான இந்திக்க குணவர்தனவின் பூதவுடலுக்கு அஞ்சலி நிகழ்வு !
மறைந்த, இலங்கையின் பிரபல கவிஞரும், சிறுகதை எழுத்தாளரும், மொழிப் பெயர்பாளருமான இந்திக குணவர்தனவின் பூதவுடலுக்கு, பாராளுமன்ற மறு சீரமைப்பு மற்றும் காணி அபிவிருத்தி அமைச்சர் கயந்த கருணாதிலக உள்ளி ட்ட பல அமைச்சர்களும் முக்கியஸ்தர்களும் நேற்றைய தினம் பூதவுடலுக்கு அஞ்சலி செலுத்தியுள்ளனர்.
இந்திக குணவர்தனவின் பூதவுடலா னது பொரளை மலர்சாலையில் நேற்றைய தினம் பொதுமக்களின் அஞ்சலிக்காக வைக்கப்பட்டிருந்தது. இன்று மாலை 6 மணிக்கு பத்தேகம பொது மயானத்தில் இவரது இறுதி கிரியைகள் நடைபெறவுள்ளது.
1977 ஆம் ஆண்டு டிசம்பர் 22 ஆம் திகதி பிறந்த, கவிஞரும் சிறுகதை எழுத்தாளரும் மொழிப்பெயர்ப்பாளருமான மறைந்த இந்திக்க குணவர்தனவிற்கு, தற்போது 40 வயதாகும். அத்தோடு, இவர் அரசாங்கத் தகவல் திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம், சட்டத்த ரணி சுதர்ஷன குணவர்தனவின் சகோதரராவார் எனத் தெரிவிக்கப்பட்டு ள்ளது.
காலஞ்சென்ற இந்திக குணவர்தனவிற்கு எமது இணையம் சார்ந்த ஆழ்ந்த அனுதாபங்களையும் இதய அஞ்சலிகளையும் தெரிவித்து நிற்கின்றோம்.