93 உள்ளுராட்சி மன்ற வேட்பு மனுக்களை ஏற்கும் செயற்பாடு நிறைவு !
அடுத்த ஆண்டிற்கான(2018) உள்ளுராட்சி மன்ற தேர்தலுக்கான, 93 உள்ளுராட்சி மன்றங்களுக்குரிய வேட்பு மனுக்களை ஏற்கும் செயற்பாடு நிறைவடைந்து ள்ளது.
இன்று பிற்பகல் 1.30 வரை எதிர்ப்புக்க ளையும், முறையீடுகளையும் தாக்க ல் செய்ய கால அவகாசம் வழங்கப்ப ட்டிருந்து. முக்கிய அரசியல் கட்சிகள் உட்பட சுயேட்சைக் குழுக்கள், உள்ளு ராட்சி மன்ற தேர்தலுக்கான வேட்பு மனுக்களை தாக்கல் செய்தன.
341 உள்ளுராட்சி மன்றங்களுக்கான தேர்தலை நடத்துவதற்கு இரண்டு கட்டங்களாக வேட்பு மனுக்கள் ஏற்றுக் கொள்ளப்பட்டதோடு, 93 உள்ளுராட்சி மன்றங்களில் போட்டியிடுவதற்காக 557 அரசியல் கட்சிகளும், சுயேட்சை க்குழுக்களும் கட்டுப்பணம் செலுத்தின.
பேரணிகளை நடத்த தடை விதிக்கப்பட்டுள்ளதோடு, 93 உள்ளுராட்சி மன்ற தேர்தலுக்கு தேவையான பாதுகாப்பை வழங்குவதற்கான 10 ஆயிரம் பொலிஸ் உத்தியோகத்தர்கள் ஈடுபடுத்தப்பட்டிருப்பதாக பொலிஸ் ஊடக ப்பேச்சாளரும் பொலிஸ் அத்தியேட்சகருமான ருவான் குணசேகர தெரிவி த்துள்ளார்.
ஏனைய 248 உள்ளுராட்சி மன்றங்களுக்கு கட்டுப்பணம் செலுத்துவதற்காக வழங்கப்பட்டுள்ள திகதி, எதிர்வரும் 20 ஆம் திகதி பகல் 12 மணியுடன் நிறை வடைவதோடு, 21 ஆம் திகதி பகல் 12 மணி வரை வேட்பு மனுக்கள் ஏற்றுக் கொள்ளப்படும்.
இந்த வேட்புமனுக்கள் கையளிக்கப்பட்ட பின் உள்ளுராட்சி மன்ற தேர்தல் நடத்தப்படுவதற்கான திகதி தேர்தல் ஆணைக்குழுவின் தலைவர் மகிந்த தேசப்பிரியவினால் தெரிவிக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.