2018 இல் உலகின் 5வது பொருளாதார மையமாக இந்தியா மாற வாய்ப்பு !
2018 இல் உலகின் 5வது பொருளாதார மையமாக இந்தியா அமைய சந்தர்ப்ப மெனத் தகவல்கள் வெளியாகியுள்ளன.
இதனடிப்படையில் லண்டனை மைய மாக கொண்ட பொருளாதாரம் மற்றும் வணிக மையம் வெளியிட்ட அறிக்கை யில், 2018 ஆம் ஆண்டு இறுதிக்குள் இந்தியா உலகின் 5ஆவது பெரிய பொரு ளாதார மையமாக மாற சந்தர்ப்பம் அமையுமெனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் தெரிவிக்கையில் உலகின் 7 ஆவது பொருளாதார மையமாக உள்ள இந்தியா உலகின் முதல் 5 பொருளாதார மையங்களில் ஐக்கிய நாடுகள் மற்றும் பிரான்ஸ் ஆகிய நாடுகளை பின்தள்ளி, 2018 ஆம் ஆண்டின் இறுதியில் 5ஆவது இடத்தை அடைய கூடிய வாய்ப்புக்கள் உள்ளதாகவும், இதே நிலையில் செய ற்பட்டால் 2032 ஆம் ஆண்டு உலகின் 3 ஆவது பெரிய பொருளாதார மையமாக மாறலாம்.
இதற்கமைவாக மலிவான எரிசக்தி மற்றும் டிஜிட்டல் புரட்சி மூலமே உலகலா விய பொருளாதார வளர்ச்சியை எட்ட முடியுமென லண்டன் பொருளாதார நிறுவனத்தின் இயக்குனர் டக்ளஸ் மெக்வில்லியம் தெரிவித்துள்ளதாக தகவ ல்கள் பரவியுள்ளன.