Breaking News

அற்ப சலுகைகளுக்காக மாற்றுக் கட்சிகளுக்கு வாக்களிக்காதீர்கள் - தேவதாஸன்

தமிழ்த் தேசியத்திற்கு வாக்களிக்காது அற்ப, சொற்ப சலுகைகளுக்காக  மாற்றுக் கட்சிகளுக்கு வாக்களித்தால் எம்மினத்திற்காக தங்களது இன்னுயி ர்களைத் தியாகம் செய்த மக்களின் ஆன்மா ஈடேற்றத்திற்கு புரியும் துரோ கமென தமிழ்த்தேசியக் கூட்டமை ப்பின் வீட்டுச் சின்னத்தில் போட்டியி டும் முருகப்பன் தேவதாஸன் விவரி த்துள்ளார். மட்டக்களப்பு மாவட்டத்தின், களுதாவளை வடக்கு வட்டாரத்திலி ருந்து தமிழ் தேசியக் கூட்டமைப்பின் வீட்டுச் சின்னத்தில் போட்டியிடும் முருகப்பன் தேவதாஸன், இன்று (26.12.2017) தமது ஆதரவாளர்கள் மத்தியில் இவ்வாறு தெரிவித்துள்ளார். 

மேலும் தெரிவிக்கையில்... இதுவரை காலமும் தமிழ் தேசியத்தின் பால் ஈர்க்க ப்பட்டு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஒற்றுமைக்காக என்றும் உழைத்த அனைத்து தமிழ் மக்களும், இம்முறை இடம்பெறவுள்ள உள்ளுராட்சி மன்றத் தேர்தலிலும், தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு வாக்களிக்க வேண்டுமென வேண்டுகோள் விடுத்துள்ளார். 

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை வடக்குக் கிழக்கு வாழ் தமிழ் மக்கள் தொட ர்ந்து ஆதரித்து வருகின்றார்கள். இதற்கிடையில் பெரும்பான்மையினக் கட்சி கள் எமது பிரதேசங்களுக்குள் புகுந்து எம்மினத்தின் வாக்குக்களைச் சூறை யாட எண்ணியுள்ளார்கள். 

இவ்வாறான விடயங்களுக்கு எமது மக்கள் தலைசாய்க்கக்கூடாது. அபிவிரு த்தியை தேசிய கட்சிகளைச் சார்ந்தவர்களால் மாத்திரம் செய்யமுடியாது. அவ ற்றை எங்களாலும் செய்யமுடியும். 

கிராம மட்ட அபிவிருத்தியை நோக்காகக் கொண்டு அமையப் பெற்றுள்ள இந்த உள்ளுராட்சி மன்றத்தை தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு கைப்பெற்றும். அதனை வைத்துக் கொண்டு இந்தப் பிரதேசத்தை பாரிய அபிவிருத்தி செய்யப்படும். மக்கள் மனங்களை வென்றவர்களையும், சமூக சேவைகளைப் புரிந்து வருப வர்களையும் சரியான முறையில் இனம்கண்டுதான் தமிழ்த் தேசியக் கூட்ட மைப்பு வேட்பாளர்களை நிறுத்தியுள்ளது. 

எனவே எம்மைப் போன்றவர்கள் தற்போது முன்னெடுத்துவரும் சமூக சேவையை உள்ளுராட்சிமன்ற அரசியலூடாக பல்கிப் பெருக்கி ஓர் நிரந்தர சமூக சேவையினை மேற்கொள்வதற்காகத்தான் இத் தேர்தலில் நான் கள மிறங்கியுள்ளேன். 

இந்த கிராமத்தில் பிறந்து வளர்ந்து, இக்கிராம மக்களின் நாடித்துடிப்பை நான் அறிந்தவன் என்ற வகையில் எவ்வாறான விடயங்களை முன்னெடுத்துச் செல்ல வேண்டும் என்பதும் எமக்குத் தெரிவும். எதிர் வருகின்ற உள்ளுராட்சி மன்றத் தேர்திலில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வெற்றியை எமது மக்கள் நிலை நாட்ட வேண்டும். 

இவற்றினை விடுத்து, வீதி அமைத்தல், பொது அமைப்புக்களுக்கு உதவிகள் வழங்குதல், போன்ற சில விடயங்களைத் தேசிய கட்சிகள் செய்கின்றார்கள் என காரணம் காட்டி, மாற்றுக் கட்சிகளுக்கு ஒருபோதும் வாக்களிக்கக் கூடாது. அவ்வாறு வாக்களித்தால் எம்மினத்திற்காக தங்களது இன்னுயிர்களைத் தியா கம் செய்தவர்களின் ஆத்தமாக்களுக்கு நாம் செய்யும் துரோகமாகும் எனத் தெரிவித்துள்ளார். 

களுதாவளைக் கிராமம் இரண்டு வட்டாரங்களாகப் பிரிக்கப்பட்டுள்ளன. எனவே, இரண்டு வட்டாரங்களிலுமுள்ள எமது கிராமத்து மக்கள் அனைவரும் ஒன்றிணைந்து ஒரு வாக்கேனும் மாற்றுக் கட்சிக்கு அளிக்காமல் வீட்டுச் சின்னத்திற்கு மாத்திரம் வழங்கி தமிழ்த் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை வெற்றிபெற வழிவகுக்க வேண்டுமென வேண்டுகோள் விடுத்துள்ளார்.