இன்று நள்ளிரவு இலங்கை வானில் நிகழவுள்ள அதிசயம்!
ஜெமினிட் (Geminid) எனப்படும் விண்கல் பொழிவானது, இன்று (14.12.2017) இல ங்கையில் மிகத்தெளிவாக தென்படவுள்ளது. இதனை இலங்கையர்கள் காணும் வாய்ப்பு கிடைத்துள்ளதாக கோள்மண்டலத் திணைக்களம் இன்று நள்ளிரவு அவதானிக்கலாமென இலங்கை கோள்மண்டல பணிப்பாளர் பிரியங்கா கோரலகம அறிவித்துள்ளார்.
நள்ளிரவு நடுவானிலும் அதிகாலை யில் மேற்கு வானிலும் விண்கல் பொழிவை காணமுடியும்.
கடந்த ஏழாம் திகதி முதல், எதிர்வரும் 17 ம் திகதி வரையான காலப்பகுதியில் ஜெமினிட் விண்கல் பொழிவு இடம்பெறவுள்ள தோடு, அந்தப் பொழி வை, நேற்றிரவும் சில இடங்களில் அவதானிக்க கூடியதாக இருந்ததென கோள்மண்டலம் மேலும் தெரி விக்கையில், வௌ்ளை, மஞ்சள், பச்சை, நீலம் மற்றும் சிவப்பு நிறங்களிலான ஜெமினிட் விண்கற்கள் பொழிவை, இலங்கையர்கள் இவ்வாண்டில் காணும் இறுதிச் சந்தர்ப்பம் இதுவெனத் தெரிவித்துள்ளது.
அத்தோடு, ஒவ்வொரு வருடமும் டிசம்பர் 7ஆம் திகதி தொடக்கம் 17ஆம் திகதி வரையான காலப்பகுதியில் விண்கற்கள் மழை பெய்யுமெனவும், இதன் உச்ச கட்டத்தை இன்று (14.12.2017) அவதானிக்கலாமென கோள்மண்டலம் தெரிவி த்துள்ளது.
அபூர்வ நிகழ்வாக கருதப்படும் இந்த விண்கல் பொழிவு டிசம்பா் மாத நடுப்பகு தியில் அதிகமாக காணப்படும் என்பதோடு, மணித்தியாலத்துக்கு 120 விண்க ற்கள் விழுவதை அவதானிக்கலாமென குறித்த திணைக்களம் தெரிவித்து ள்ளது.