தத்தெடுத்த பெற்றோரால் சித்திரவதைகளுக்கு ஆளாகி பலியான - சிறுமி
அமெரிக்காவில் வசிக்கும் இந்தியாவைப் பூர்வீகமாக கொண்ட தம்பதியினர் தத்து எடுத்த சிறுமி ஷெரின் இறப்பதற்கு முன் பல சித்திரவதைகளுக்கு ஆளா கியிருப்பதாக வைத்தியர்கள் அறிக்கையில் தெரிவித்துள்ளனர்.
அமெரிக்காவின் டல்லாஸ் பகுதியில் வசிக்கும் குறித்த தம்பதியினர் ஷெ ரின் என்ற சிறுமியை தத்தெடுத்து வளர்த்த நிலையில் அவர் வளர்ப்பு பெற்றோர்களால் சித்திரவதைக்கு உள்ளாக்கப்பட்டு சிறுமி இவ்வாண்டு ஒக்டோபர் மாதம் 7ம் திகதி காணா மல் போயுள்ளதாக தெரிவிக்கப்பட்டு ள்ளது. இந்நிலையில் குறித்த தம்பதிகள் வசித்து வந்த பகுதிக்கு அருகிலுள்ள ஒரு சிறு பாலத்தின் அடியிலிருந்து சிறுமியின் உடல் ஒக்டோபர் மாதம் 22ம் திகதி கண்டு பிடிக்கப்பட்டது.
இதனையடுத்து வெஸ்லி மற்றும் சினி மேத்யூ தம்பதிகள் பொலிசாரால் கைதாகியுள்ளனர்.
இது தொடர்பான வழக்கு நடைபெற்று வருவதுடன், உயிரிழந்த சிறுமி ஷெரின் உடலைப் பரிசோதனை செய்த வைத்தியரகள் சிறுமியின் கால்களில் பல்வேறு கால கட்டங்களில் எலும்பு முறிவுகள் ஏற்பட்டு அவை காயமடைந்த நிலையில் காணப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் சிறுமி சித்திரவதைக்கு ஆளாகியுள்ளதாகவும் வைத்தியர்கள் தெரிவி த்துள்ளனர்.