அரசியல் கைதிக்கு முரணான வழக்கில் யாழ். மேல் நீதிமன்றின் பதிவாளர் சாட்சியமளிப்பு!
தமிழ் அரசியல் கைதி கனகரத்தினம் ஆதித்தனுக்கு எதிராக கொழும்பு சிற ப்பு மேல் நீதிமன்றில் இடம்பெறும் வழக்கில் யாழ்ப்பாணம் மேல் நீதிம ன்றப் பதிவாளர் திருமதி மீரா வடிவே ற்கரசன் நேற்று (14) சாட்சியமளித்து ள்ளார். ஆதித்தனுக்கு எதிராக யாழ்ப் பாணம் மேல் நீதிமன்றில் நடைபெ ற்ற வேறொரு வழக்கில் அவர் மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுக்கான குற்ற ஒப்புதல் வாக்கு மூலம் நிராகரிக்கப்ப ட்டுள்ளது. அது தொடர்பில் சாட்சியம் பெறுவதற்கே கொழும்பு சிறப்பு மேல் நீதிமன்றால் யாழ்ப்பாணம் மேல் நீதிமன்றப் பதிவாளர் நேற்று அழைக்கப்ப ட்டிருந்தார்.
தமிழ்த்தேசிய கூட்டமைப்பின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் கன கரத்தினத்தின் மகனான ஆதித்தன் (வழக்கில் இணைக்கப்பட்டுள்ள மறு பெய ர்களான கிரிதரன் அல்லது கிரி அல்லது ரஞ்சன் அல்லது தாஸ் அல்லது கண்ணன்) பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் 2009ஆம் கைதாகியுள்ளார்.
விடுதலைப் புலிகள் அமைப்பில் ஆயுதப் பயிற்சி பெற்றார் மற்றும் ஆபத்தை விளைவிக்கக் கூடிய வகையில் வெடிகுண்டுத் தாக்குதல்களை நடத்தத் திட்ட மிட்டார் என்ற குற்றச்சாட்டில் யாழ்ப்பாணம் மேல் நீதிமன்றில் 2014ஆம் ஆண்டு மார்ச் மாதம் சட்டமா அதிபரால் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய ப்பட்டுள்ளது.
அவர் மீதான குற்றச்சாட்டை நிரூபிக்க அவரால் வழங்கப்பட்டது எனத். தெரி வித்து குற்ற ஒப்புதல் வாக்கு மூலம் முன்வைக்கப்பட்டது.
வழக்கை விசா ரணை மேற்கொண்ட யாழ்ப்பாணம் மேல் நீதிமன்ற நீதிபதி மாணிக்கவாசகர் இளஞ்செழியன், குற்ற ஒப்புதல் வாக்கு மூலத்தை நிராகரித்து, ஆதித்தனை 2015ஆம் ஆண்டு செப்ரெம்பர் 17ஆம் திகதி வழக்கிலிருந்து விடுவித்தார்.
யாழ்ப்பாணம் மேல் நீதிமன்றில் கட்டளைக்கு அமைவாக அநுராதபுரம் மேல் நீதிமன்றில் இடம்பெற்ற வழக்கின் குற்ற ஒப்புதல் வாக்கு மூலமும் நிராகரி க்கப்பட்டது.
இந்த நிலையில் கனகரத்தினம் ஆதித்தனுக்கு எதிராக மற்றொரு குற்றப்பத்தி ரிகை பயங்கரவாத குற்றச்செயல்களை விசாரிக்கும் கொழும்பு சிறப்பு மேல் நீதிமன்றில் சட்டமா அதிபரால் தாக்கல் செய்யப்பட்டது.
முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச, அவரது சகோதரர் கோத்தாபய ராஜபக்ச மற்றும் முன்னாள் இராணுவத் தளபதி சரத் பொன்சேகா ஆகியோரை படு கொலை செய்யத் திட்டம் தீட்டியதாக குற்றப்பத்திரிகையில் ஆதித்தன் மீது குற்றம் சுமத்தப்பட்டது.
வழக்கின் அரச தரப்புச் சாட்சியங்கள் நிறைவடைந்த நிலையில் எதிரி தரப்புச் சாட்சிகள் இடம்பெற்று வருகின்றன.
இந்த வழக்கில் கனகரத்தினம் ஆதித்தன் சார்பில் முன்னிலையான மூத்த சட்டத்தரணி கே.வி. தவராசாவின் விண்ண ப்பத்தையடுத்தே நேற்று(14) யாழ்ப்பாணம் மேல் நீதிமன்றப் பதிவாளரிடம் சாட்சியம் பெறப்பட்டது.
யாழ்ப்பாணம் மேல் நீதிமன்றில் இடம்பெற்ற மூல வழக்கேட்டுடன் அழை க்கப்பட்ட அவரிடம் வழக்கின் நாட்குறிப்பிலுள்ள விடயங்கள் தொடர்பில் சாட்சியம் பெறப்பட்டது.