Breaking News

“ சிறந்த பொறியியலாளராக வருவதே எனது இலக்கு” (காணொளி)

சிறந்த ஒரு பொறியியலாளராக வந்து எமது சமூகத்திற்கு சேவையாற்றுவதே எனது எதிர்கால இலக்கு என கணிதத்துறையில் தேசிய மட்டத்தில் 3 ஆம் இடத்தையும் யாழ்.மாவட்டத்தில் 2 ஆம் இடத்தையும் பெற்றுக் கொண்ட மாணவன் றேமன் டெய்சியஸ் ஜெயராஜன் போல் ஜான்சன் தெரிவித்துள்ளார்.

ஆரம்பப் பிரிவில் புனித பத்திரி சிரியார் கல்லூரியில் கல்வி கற்று சிறந்த சித்தி பெற்று பின்னர் கல்விப் பொதுத்தராதர சாதாரண பரீட்சை யில் 9 பாடங்களிலும் ஏ சித்தி பெற்றேன். எனக்கு சிறுவயது முதலே கணிதப் பிரிவில் அதிக ஈடுபாடு இரு ந்தமையால் உயர்தரத்திலும் கணிதப் பிரிவை தெரிவு செய்து கொண்டேன்.



இந்த மாணவனுக்கு எமது இணையம் சார்ந்த பாராட்டுக்களையும் வாழ்த்துக்களையும் தெரிவிப்பதில் பெருமிதம் அடைகின்றோம்.