Breaking News

ஊடகவியலாளர்களின் தொழில் ரீதியான பிரச்சினைகளை தீர்ப்பதற்காக விசேட குழு….!

பிரதேச ஊடகவியலாளர்களின் தொழில்சார்ந்த பிரச்சினைகள் குறித்து கண்ட றிந்து அவற்றிற்கான தீர்வுகளை வழங்குவதற்கு பரிந்துரைகளை முன்வைப்ப தற்காக விசேட குழுவொன்றை நியமிக்குமாறு ஜனாதிபதி மைத்ரிபால சிறி  சேன பணித்துள்ளார். 
அரசாங்க தகவல் பணிப்பாளர் நாய கம் மற்றும் ஊடகத்துறை அமைச்சின் மேலதிக செயலாளர் தொழில் ஆணையாளர் நாயகம் ஆகியோரை க்கொண்ட இக்குழு மூன்று மாதக் காலப்பகுதியில் இது தொடர்பான அதன் அறிக்கையை தனக்கு சமர்ப்பி க்க வேண்டுமென்றும் ஜனாதிபதி வேண்டுகோள் விடுத்துள்ளார். பிரதேச ஊடகவியலாளர்களின் தொழில்சா ர்ந்த பிரச்சினைகள் குறித்து இன்று முற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் நடைபெற்ற விசேட கலந்துரையாடலின்போதே ஜனாதிபதி இவ்வாறு தெரிவி த்துள்ளார்.  பிரதேச ஊடகவியலாளர்களின் சம்பளம் மற்றும் கொடுப்பனவுகள் தொடர்பான பிரச்சினைகள் குறித்து இங்கு விசேட கவனம் செலுத்தப்பட்ட துடன், ஊடகவியல் துறையில் அவர்கள் முகம்கொடுத்துள்ள பிரச்சினைகள் குறித்தும் கலந்துரையாடப்பட்டது. 

அண்மையில் இடம்பெற்ற ஊடகவியலாளர்கள் தொழிற்சங்க சம்மேளன த்தின் 6வது பிரதிநிதிகள் மாநாட்டில் ஜனாதிபதியிடம் முன்வைக்கப்பட்ட அறி க்கையில் விவரிக்கப்பட்டுள்ள விடயங்கள் தொடர்பாகவும் கலந்துரையா டப்பெற்றது.