Breaking News

வடக்கு முதல்வர் – மலேசியப் பிரதமருடனான சந்திப்பை தடுக்க முயன்ற - அரசு !

வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனை மலேசியப் பிரதமர் நஜீப் அப்துல் ரசாக் சந்திப்பதைத் தடுக்கும் முயற்சியில் சிறிலங்கா அரசாங்கம் ஈடுபட்டமை தொடர்பிலான தகவல்கள் பரவியுள்ளன. 

இச் சம்பவம் தொடர்பின் பின்னணியை கொழும்பின் ஆங்கில ஊடகம் ஒன்று பிரசு ரித்துள்ள அச் செய்தியில் தெரிவிக்கப்ப ட்டுள்ளதாவது, கடந்த வாரம் சிறிலங்காவு க்குப் பயணம் மேற்கொண்டிருந்த மலேசி யப் பிரதமர் ரசாக், வடமாகாண முதலமை ச்சர் சி.வி.விக்னேஸ்வரனைச் சந்திக்கத் திட்டமிட்டிருந்தார். தமது தலைவர்கள் யாரையும் சந்திப்பதற்கு மலேசியப் பிர தமர் தெரிவு செய்யாதமை குறித்து தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு கோபமடை ந்தது. இவ் விவகாரம் குறித்து கூட்டமைப்பைச் சேர்ந்த ஒருவர் சிறிலங்கா பிர தமர் ரணில் விக்கிரமசிங்கவிடம் தெரிவித்திருந்தார். 

இது குறித்து, சிறிலங்கா வெளிவிவகார அமைச்சிடம் பிரதமர் பணியகம் அதி ருப்தியை வெளியிட்டது.  அதேவேளை, சிறிலங்கா அரசாங்கம் சந்திப்புக்கு அனுமதி அளிக்கவில்லை என்ற அடிப்படையில் வடக்கு மாகாண முதலமை ச்சருடனான மலேசியப் பிரதமரின் சந்திப்பை ரத்துச் செய்யும் முயற்சிகளில் சிறிலங்கா வெளிவிவகார அமைச்சு அதிகாரிகள் செயற்பட்டுள்ளனர். 

ஆனாலும் அவ் முயற்சி வெற்றி அளிக்கவில்லை. மலேசியப் பிரதமருடன் வந்திருந்த உயரதிகாரிகள், தமது  தலைவரின் சந்திப்பு ரத்துச் செய்ய முடியா தென வலியுறுத்தினர். 

தமது பிரதமர் யாழ்ப்பாணத்துக்குப் பயணம் செய்வதற்கும் முதலில் திட்ட மிட்டிருந்தார் என்று மற்றொரு அதிகாரி வலியுறுத்திக் கூறியிருந்தார். 

வடமாகாண முதலமைச்சர் விக்னேஸ்வரனுடனான பிரதமரின் சந்திப்பு மிக வும் வெற்றிகரமானதாக இருந்தது, மலேசியப் பிரதமரை அவர் ஈர்த்து விட்டார்” எனத் தெரிவித்த மலேசிய அதிகாரி ஒருவர், விக்னேஸ்வரனை உள்ளூர் நண்பர் எனத் தெரிவித்துள்ளார்.