மஹிந்தவை ஆட்சிக்கு அமர்த்தும் தேர்தலாக செயற்படுத்துவோம் - டலஸ் (காணொளி)

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவை மீண்டும் ஆட்சிக்கு கொண்டு வருகின்ற முதற்படியாக எதிர்வரும் உள்ளூராட்சி சபைகளுக்கான தேர்தலை பயன்படுத்திக் கொள்வதாக ஒன்றிணைந்த எதிர்கட்சி தெரிவித்துள்ளது.

மஹிந்த ராஜபக்சவை மீண்டும் ஆட்சி க்கு கொண்டுவராவிட்டால் ஸ்ரீலங்கா விலுள்ள அத்தனை பொதுச் சொத்து க்களையும் ரணில் – மைத்திரி தலை மையிலான நல்லாட்சி அரசாங்கம் சர்வதேசத்திற்கு குத்தகைக்கு கொடு த்துவிடுமென ஒன்றிணைந்த எதிர ணியின் நாடாளுமன்ற உறுப்பினர் டலஸ் அழகப்பெரும தெரிவித்துள்ளார். 

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவுக்கு ஆதரவாக செயற்படும் ஒன்றி ணைந்த எதிரணியின் பங்காளிக் கட்சியான ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணி தேர்தலுக்கான வேட்பு மனுத் தாக்கல் செய்த இறுதி நாளான நேற்று இரவு முதலாவது மக்கள் கூட்டத்தை நடத்தியுள்ளது.

மாத்தறையில் இடம்பெற்ற இக் கூட்டத்தில் அக்கட்சியின் நாடாளுமன்ற உறு ப்பினர்களான டலஸ் அழகப்பெரும, நிரோஷன் பிரேமரத்ன ஆகியோர் கலந்து கொண்டிருந்தனர். இதன்போது உரையாற்றிய நாடாளுமன்ற உறுப்பினர் டலஸ் அழகப்பெரும “மஹிந்த ராஜபக்சவை மீண்டும் ஆட்சிக்கு கொண்டு வருகின்ற தேர்தலாக இதனை பயன்படுத்த வேண்டும்.

முதலாவது தவறு 2015ஆம் ஆண்டு ஜனவரி 8ஆம் திகதி ஏற்பட்டது. அடுத்த தவறு அதே ஆண்டில் ஓகஸ்ட் மாதத்தில் நடைபெற்றது. இன்றுவரை அந்தப் பிழைகளை திருத்திக் கொள்வதற்கு சந்தர்ப்பம் ஏற்படவில்லை.

நாடாளுமன்றத்திலும் வெற்றிலைச் சின்னத்தில் வெற்றிபெற்ற 40 பேர் அரசா ங்கத்திற்காக கைகளை உயர்த்த தயாராகியுள்ளனர். இந்த தவறை நாடா ளுமன்றத்தில் சரி செய்ய முடியாது. அரசாங்கத்துடன் இணைந்த அனை வரும் வெளியேற வேண்டும் அல்லது தேர்தலை நடத்த வேண்டும். எம்முடன் இருந்த நண்பகர்கள் இன்று எமக்கே நிபந்தனை விதிக்கின்றனர்.

இணைந்து போட்டியிட வேண்டுமென்றால் நாடாளுமன்றத்தில் இணைந்தும், வெளியே உள்ள உள்ளூராட்சி சபைகளை ஐக்கிய தேசியக் கட்சிக்குத் தாரை வார்ப்பதாகவும் அவர்களது நிபந்தனை அமைகிறது. எனவே மஹிந்த ராஜ பக்சவின் தலைமையில் ஆட்சியை அமைக்காவிட்டால் நகர சபை, பிரதேச சபை அல்ல, அம்பாந்தோட்டை துறைமுகம், விமான நிலையம் போன்ற வற்றையும் இழக்கநேரிடும்” எனத் தெரிவித்துள்ளார்.