இரு தோணியில் கால் மிதிப்பவர்களை தெரிவு செய்யாதீர்கள் எச்சரிக்கை - சி.வி.கே!
எதிர்வரும் உள்ளுராட்சி சபைத் தேர்த லில் மக்கள் சரியானவர்களை தெரிவு செய்ய வேண்டும். இரு தோணியில் கால் மிதிப்பவர்களை தெரிவு செய்ய வேண்டாமென வடமாகாண சபை அவைத் தலைவர் சீ.வி.கே. சிவஞானம் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
வடமாகாண சபையின் 2018 ஆம் ஆண்டிற்கான நிதி ஒதுக்கீட்டிலான மூன்றாம் நாள் விவாத்தின் 114வது அமர்வு இன்று வியாழக்கிழமை (14) காலை 10.00 மணியளவில் அவைத் தலைவர் சீ.வி.கே.சிவஞானம் தலை மையில் இடம்பெற்றுள்ளது. மேலும் பல குற்றச்சாட்டுக்கள் அவரால் முன்வைக்கப்பட்டன. வடக்கு மாகா ணசபையின் அமா்வின் போது முதலமைச்சா் சரியான நேரத்தில் அவைக்கு வருகை தந்துள்ளார். ஆனால் ஏனைய உறுப்பினர்கள் தாமதமாக அவைக்கு வருகை தந்துள்ளனர். அத்துடன், நேற்றைய தினம் முதலமைச்சர் உட்பட 15 உறுப்பினர்களே இறுதி நேரத்தில் அமர்வில் இருந்தார்கள். ஊடகங்கள் தமது அவதானிப்புக்களை சரியான முறையில் முன்னெடுத்துள்ளார்.
தேர்தல்களின் போது மக்கள் தவறிழைக்கின்றார்கள்.
நடைபெறவுள்ள உள்ளுராட்சி மன்ற தேர்தலில் மக்களுக்கு சேவை செய்ய வேண்டியவா்களை தெரிவு செய்ய வேண்டும். இரு தோணியில் கால் வைப்ப வர்களை தெரிவு செய்யாதீர்கள்.
ஜனநாயகத்தின் தூண்களாக உள்ள ஊடக வியலாளர்கள் மக்களுக்குத் தெரியப்படுத்த வேண்டும். முன்னைய காலங்க ளில் மக்களுக்கு சேவை செய்வதற்காகவே பலர் வாழ்ந்தார்கள்.
தற்போது மக்கள் பெயர்களைப் பார்த்து வாக்களிக்கின்றார்கள். மக்களுக்குச் சேவை செய்யக்கூடியவர்கள் நிறையப் பேர் இருக்கின்றார்கள். அவர்களைத் தெரிவு செய்ய வேண்டும்.
சபைக்கென ஒரு நியதி உள்ளது.
பொது நலன் சார்ந்த உறுப்பினர்கள் செயற்பட வேண்டும். உள்ளுராட்சி சபைத் தேர்தலில் மக்களுக்குச் சேவை செய்யக்கூடிய பொது மக்கள் நலன்சார்ந்து யோசித்து இறுதி வரை மக்களுடன் செயற்படக் கூடியவர்களை தெரிவு செய்ய வேண்டுமெனத் தெரிவித்துள்ளார்.
அதேவேளை, காலை 12 உறுப்பினர்களே அவைக்கு உரிய நேரத்தில் வருகை தந்துள்ளார்கள். ஏனையவர்கள் சரியான நேரத்திற்கு வருவதில்லை. அதுவும், வெளிமாவட்டங்களில் உள்ளவர்கள் சரியான நேரத்திற்கு வருகின்றார்கள்.
யாழ்.மாவட்டத்தில் உள்ளவர்கள் சரியான நேரத்திற்கு வருவதில்லை எனவும் தெரிவித்துள்ளார்.
எனவே, சபைக்கு தாமதமாக வரும் உறுப்பினர்களின் பெயரைக் குறிப்பிட்டு வெளிப்படுத்துவேன்.
எனவே, உறுப்பினர்கள் தமது உறுப்பினா்களுக்குரிய கட மையைச் செய்ய வேண்டும். ஆகையினால், பொது நலன் சார்ந்து, பொது மக்கள் இனிவரும் காலங்களில் மக்களுக்குச் சேவை செய்யக்கூடிய சரியான அர்ப்பணிப்புள்ளவர்களை தெரிவு செய்ய வேண்டுமென மக்கள் விழிப்புணர்வு டன் செயற்பட வேண்டுமென எச்சரிக்கை விடுத்துள்ளார்.