Breaking News

விண்வெளியில் வை-பை ஏற்பாட்டுடன் ஐந்து நட்சத்திர விடுதி!

சுற்றுலா பயணிகளை கவரும் நோக்கில் சர்வதேச விண்வெளி நிலையத்தில் ஆடம்பர விடுதியை கட்ட தனியார் மற்றும் ரஷ்ய அரசு திட்டமிட்டுள்ளது. அமெரிக்கா, இங்கிலாந்து, ரஷ்ய, ஜப்பான், கனடா உள்ளிட்ட 17 ஐரோப்பிய நாடுகளின் விண்வெளிக் கழகமும் இணைந்து 150 பில்லியன் டாலர் செலவில் பூமிக்கு மேல் விண்வெளியில் 400 மைல் தொலைவில், சர்வதேச விண்வெளி ஆய்வு மையத்தை உருவாக்கிக் கொண்டிருக்கின்றது. விண்வெளிக்கு சுற்றுலா பயணிகளை கவர ஆடம்பர 5 ஸ்டார் ஹோட்டலை கட்ட ரஷ்ய அரசு திட்டமிட்டுள்ளது. 3300 கோடி செல வில் கட்டப்படும் இக் ஹோட்டலில் மருத்துவ வசதி, உடற்பயிற்சி கூடம், வை-பை வசதி போன்ற வைகள் ஏற்பட்டுத்தப்படவுள்ளது. 

சுற்றுலா பயணிகள் இங்கு 1 முதல் 2 வாரங்கள் வரை தங்க 300 கோடி ரூபாய் கட்டணமாக வசூலிக்கப்படுமெனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.