Breaking News

யார் மஹிந்தவை ஆட்சியில் அமர்த்த விரும்புவது யார் என புரிகின்றதாம் – கஜேந்திரகுமார்

மஹிந்தவை மீண்டும் ஆட்சிக்கு அம ர்த்தப் பாடு படுவதாக கூட்டமைப்பி னர் எம்மீது பிரச்சாரங்களை செய்து ள்ளனர். ஆனால் மஹிந்த ஓடோடி ப்போய் சம்பந்தரை நலம் விசாரித்தது ஏன் என தெரியவில்லையென தமி ழ்த் தேசிய மக்கள் முன்னணி தலை வர் பொன்னம்பலம் கஜேந்திரகுமார் தெரிவித்துள்ளார். 

உள்ளூராட்சிசபைத் தேர்தலில் அகில இலங்கை தமிழ்க் காங்கிரஸ் சின்ன த்தில் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியுடன் இணைந்து போட்டியிடும் தமி ழ்த்தேசிய பேரவையின் வேட்பாளர்கள் தொடர்பான ஊடகவியலாளர்களி ற்கான அறிமுகக் கலந்துரையாடல் இன்று செவ்வாய்க்கிழமை இடம்பெற்று ள்ளது. தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியின் தலைமைச் செயலகத்தில் நடை பெற்ற இக்கலந்துரையாடலில் “சம்பந்தரை மஹிந்த தன் மகன் சகிதம் சென்று நலன் விசாரித்துள்ளார். 

ஆனால் உங்களைத் தானே மஹிந்தவை மீண்டும் ஆட்சிக்கொண்டுவர பாடு படும் கட்சி என்று கூட்டமைப்பினர் பிரச்சாரம் செய்கின்றனர்?“ என ஊடகவிய லாளர் ஒருவர் கேள்வி எழுப்பியிருந்தார். இதற்கு பதிலளித்த பொன்னம்பலம் கஜேந்திரகுமார் அதுதான் தனக்கும் புரியவில்லையென்றார்.