போட்டித் தவிர்ப்பு ஒப்பந்தத்தின் ஊடாக தமிழ்த் தேசியக்கூட்டமைப்பை வீழ்த்துவோம்!
ரணில் தலைமையிலான ஐக்கிய தேசியக் கட்சியின் ஒரு கிளையாக செயற்படும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை வீழ்த்தினால் தான் தமிழ் மக்களின் விடிவிற்கான பயணத்தை முன்னெடுக்க முடியுமென்ற கருத்து முன்வைக்கப்பட்டுள்ளது.
தமிழ்த் தேசியக் கூட்டமை ப்பை வீழ்த்தினால் தான் தமிழ் மக்க ளின் எதிர்காலத்தை உருவாக்க முடி யும். உள்நாட்டிலும், அண்டை நாடான இந்தியாவிலும், அமெரிக்கா உள்ளி ட்ட சர்வதேச அரங்கிலும் தமிழ்ம க்கள் ஆதரவைக் கொண்ட தலைவ ர்களைத்தான் மதிப்பார்கள்.
தற்போது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு அவ்வா றான ஆதரவை கொண்டுள்ளதால் சிங்கள ஆட்சியாளர் தமிழ்த் தேசியக் கூட்ட மைப்பின் தலைவர்களை விலை கொடுத்து வாங்கி அவர்களின் ஆதரவுடன் உள்நாட்டிலும், அண்டை நாட்டிலும், ஐநா உள்ளிட்ட சர்வதேச அரங்கிலும், தமிழருக்கு எதிரான இனவழிப்பு, போர்க்குற்றவிசாரணை ஊடாக ஈழத்தமிழ ருக்கு நீதி, தீர்வை தடுப்பதற்கான எமக்கெதிரான அனைத்து சூழ்ச்சி அரசிய லையும் முன்னெடுக்க முடிகிறது.

இன்நிலையில் வடக்கு – கிழக்கு பிரிப்பை அரசியல்யாப்பு விதியாக கொண்ட தமிழர்கள் சுயநிர்ணய உரிமை என்ற வார்த்தையை பிரயோகித்தாலே தண்டனைக்குரிய குற்றம் என்ற வகையிலான அரசில் யாப்பை நல்லாட்சி அரசாங்கம் கூட்டமைப்பின் ஆதரவுடன் நிறைவேற்ற எண்ணியுள்ளது.
இன்று ரணில் தலைமையிலான ஐக்கிய தேசியக் கட்சியின் ஒரு கிளையாக செயற்படும் சம்பந்தன், சுமந்திரன், சேனாதிராஜா தலைமையிலான தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை வீழ்த்துவதிலிருந்து தான் தமிழ்மக்களின் விடிவி ற்கான பயணத்தை முன்னெடுக்கலாம்.
இங்கு உள்ளூராட்சி தேர்தலில் ஒரே ஒரு இலக்கு தமிழ்த் தேசியக் கூட்ட மைப்பை வீழ்த்துவதே, இந்த ஒற்றை இலக்கை அடைவதற்கான ஓர் ஐக்கிய முன்னணியை உருவாக்கும் முயற்சிகள் வெற்றியடையாத நிலையில் எம்மி டம் உள்ள இறுதி வழியாக “போட்டி தவிர்ப்பு ஒப்பந்தம் “ (non-contest pact) என்ற ஒரு வழி உண்டு.
போட்டி தவிர்ப்பு ஒப்பந்தம்
வடக்கில் வவுனியா மன்னார் தவிர்த்த ஏனைய பகுதிகளில் சைக்கிள் சின்ன த்திற்கு உரியது என்றும் மன்னார் வவுனியா உதய சூரியனுக்கு உரியது என்றும் கிழக்கில் அம்பாறை தவிர்ந்த திருமலை மட்டக்களப்பு பகுதி சைக்கிள் சின்னத்திற்குரியது என்றும் அம்பாறை உதயசூரியனுக்குரியதெனவும் ஒரு போட்டி தவிர்ப்பு ஒப்பந்தத்தை மேற்கொண்டால் தமிழ்த் தேசியக் கூட்ட மைப்பை வீழ்த்த சந்தர்ப்பம் உள்ளது.

இந்த ஒப்பந்தம் மாவட்ட அடிப்படையில் மேற்கொள்வதில் ஏதாவது தடைகள் இருந்தால் அதனை தனித்தனியேயோ அல்லது உள்ளூராட்சி சபைகளின் அடி ப்படையிலேயோ முன்னெடுக்கலாம்.
எப்படியோ கூட்டமைப்புக்கு எதிரான வாக்குகளை சிதற விடாது பேணி தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை தோற்கடிப்பது இது ஒரு இறுதி வழியாகும். இவ்வகை யில் கூட்டமைப்புக்கு எதிரான நிலைப்பாட்டை அடிப்படையாக வைத்து தமிழ்மக்களின் உரிமைகளை முன்னெடுக்கவல்ல ஒரு மாபெரும் தமிழ்த்தே சிய பேரலையை இந்த தேர்தல் காலமான ஒன்றரை மாதங்களுக்குள் உரு வாக்க முடியும்.
3வயது குழந்தையிலிருந்து 90வயதுப் பாட்டிவரை மத்தளம், மேளம், உடுக்கு, மற்றும் இசைக்கருவிகளின் துணைகொண்டு தமிழீழ கிராமங்கள் எங்கும் சென்று தமிழ்த்தேசிய மக்கள் பேரலையை உருவாக்கலாம்.
இதன் மூலம் கூட்டமைப்பை வீழ்த்துவது மட்டுமன்றி ஜனநாயகத்தின் பெய ரால் இந்தியா அமெரிக்க போன்ற நாடுகளின் ஆதரவை எம்பக்கம் திருப்ப முடியும் ஒருபோட்டி தவிர்ப்பு ஒப்பந்தமாவது கையில் இருந்தால் தான் தமிழ்மக்கள் இத்தகைய ஓர் தேசிய பேரலையை ஏற்படுத்த தயாராவார்கள்.
எதிரிகளை ஜனநாயக ரீதியில் வீழ்த்தவும் தமிழ் மக்களின் பண்பாடு கலை இலக்கியம் உள்ளிட்ட ஒரு தேசிய எழுச்சியை ஏற்படுத்த இது ஒரு பெரும் வாய்ப்பாக உள்ளது.