மாற்றத்தை நோக்கி மாற்றுத்திறனாளிகள் - டிசம்பர் ஒன்பது லண்டனில் !
தமிழ் மாற்றுத் திறனாளிகளால் வருடந்தோறும் வடக்கிலும் கிழக்கிலும் தமிழ் மாற்றுத்திறனாளிகள் விளையாட்டு விழா நடாத்தப்படுகின்றது.
அதனை முன்னிட்டு லண்டனில் நடா த்தப்பட இருக்கும் இசை நிகழ்ச்சிக்கு பிரித்தானியாவில் வாழும் உறவுகள் அனைவரையும் கலந்து கொள்ளு மாறு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
போட்டிகளில் கலந்து கொள்ளும் அனைத்து தமிழ் மாற்றுத் திறனா ளிகள் சார்பாகவும் அப்போட்டிகளை ஒருங்கிணைக்கும் தமிழ் மாற்றுத் திறனாளிகள் அமைப்பு (DATA ) அழைப்பு விடுத்துள்ளது. போர் தாண்டவமாடிய பூமியில் அதன் வலிகளாக வடுக்களாக வாழும் மாற்றுத் திறனாளிகள் வாழ்வில் சிறந்த மாற்றத்தை உருவாக்க வேண்டுமென்ற நோக்கோடு நடாத்தப்படும் இப்போட்டிகளில் பல ஆயிரம் மாற்றுத் திறனாளிகள் பங்கேற்கவுள்ளனர்.
2016ம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்ட இந்த தமிழ் மாற்றுத் திறனாளிகள் விளை யாட்டு விழாவை தமிழ் மாற்றுத் திறனாளிகளே தலைமை ஏற்று ஒருங்கி ணைத்து நடாத்தி வருகின்றனர்.
தமிழ் மாற்றுத் திறனாளிகள் ஒரு பேசு பொருளாக இருக்க வேண்டும், அதன் மூலம் அவர்களின் வாழ்வும் வாழ்வாதாரமும் முன்னேற வேண்டும் என்ற நோக்கோடு நாம் பல சவால்களின் மத்தியில் இவ் விழாவை நடாத்துவதாக கூறும் தமிழ் மாற்றுத் திறனாளிகள் அமைப்பின் தலைவர் திரு சி.பரமான ந்தம், வீடுகளுக்குள் முடங்கிக் கிடக்கும் மாற்றுத் திறனாளிகளை மைதானங்க ளுக்கு அழைத்து வருவதே ஒரு சவாலான விடயமாகும்.
இதேவேளை தமிழ் மாற்றுத் திறனாளிகள் விளையாட்டு விழாவில் பங்கு கொள்ளும் வீரர்கள் தற்போது சர்வதேச போட்டிகளிலும் பங்குகொள்ள தெரி வாகியுள்ளார்கள்.
2018ம் ஆண்டு நடைபெறவுள்ள விளையாட்டு விழாவை முன்னிட்டு ஒரு மாலை மாற்றுத்திறனாளிகளுக்காக என்னும் இசை நிகழ்ச்சி லண்டனில் Zoroastrian Centre, 440 Alexandra Ave, Harrow HA2 9TL இல் (09.12.2017) டிசம்பர் மாதம் 9ம் திகதி மாலை 06.00 மணிக்கு நடைபெறவுள்ளது.
இந்நிகழ்வில் வடக்கிலும் கிழக்கிலும் போட்டிகளை ஒருங்கிணைக்கும் மாற்றுத்திறனாளி தலைவர்கள் காணொளி மூலம் கலந்து கொண்டு இப்போ ட்டிகள் குறித்த விளக்கத்தினை வழங்குவார்கள்.