யாழில் ஒன்பது கட்சிகளின் வேட்பு மனுக்கள் ஏற்கப்பட்டுள்ளது!
யாழ்ப்பாணம் சாவகச்சேரி நகரசபைத் தேர்தலில் போட்டியிடுவதற்காக ஒன்பது அரசியல் கட்சிகள் வேட்பு மனுத்தாக்கல் செய்துள்ளதாகவும் சகல வேட்பு மனுக்களும் ஏற்று கொள்ளப்பட்டுள்ளதாகவும் யாழ் மாவட்ட தெரிவத்தாட்சி அலுவலர் நாகலிங்கம் வேதநாயகன் தெரிவித்துள்ளார்.
வேட்புமனு தாக்கல் செய்வதற்கான நேரம் இன்று நண்பகலுடன் நிறை வடைந்த நிலையில் சகல கட்சிகளு க்குமான கலந்துரையாடல் இன்று நண்பகல் மாவட்ட தெரிவத்தாட்சி அலுவலர் நாகலிங்கம் வேதநாயகன், உதவி தேர்தல் ஆணையாளர் ம.அகி லன் ஆகியோரின் தலைமையில் நடைபெற்றுள்ளது. நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் யாழ் மாவட்ட தெரிவத்தாட்சி அலுவலர், இதுவரை வேட்புமனுத் தாக்கல் செய்த ஒன்பது கட்சிகளின் விண்ணப்பங்களும் ஏற்றுக்கொள்ளப்பட்டதாக குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை எதிர்வரும் பெப்ரவரி மாதம் பதினைந்தாம் திகதிக்குள் நடத்தப்ப டுவதற்குத் திட்டமிட்டுள்ள உள்ளூராட்சி சபைத் தேர்தலில், யாழ் மாவட்ட த்தில் இம்முறை பல்வேறு கட்சிகள் போட்டியிடவுள்ளதாக தெரிவிக்கப்பட்டு ள்ளது.