வட கொழும்பில் அரசியல் நபர்களிடமிருந்து அச்சுறுத்தலாம் – மனோ கணேசன்
வட கொழும்பில் மையம் கொண்ட ஒருசில அரசியல் நபர்களினால் அச்சுறு த்தப்பட்டுள்ளதாக ஜனநாயக மக்கள் முன்னணி மற்றும் முற்போக்கு கூட்ட ணி தலைவரும், தேசிய சகவாழ்வு கலந்துரையாடல் மற்றும் அரச கரும மொழிகள் அமைச்சருமான மனோ கணேசன் தெரிவித்துள்ளார்.
இதன் காரணமாகவே விசேட அதிரடி ப்படை பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ள தாகவும் மேலும் தெரிவிக்கையில்,
வெவ்வேறு கலந்துரையாடல்களில், நான் எதிர்நோக்கும் அச்சுறுத்தல் தொடர்பில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, பிரதமர் ரணில் விக்கிரம சிங்க ஆகியோருக்கு தெரிவித்து ள்ளேன். நான் கொழும்பு மாவட்ட பாராளுமன்று உறுப்பினர். ஆனால், முழு நாட்டை யும் உள்ளடக்கிய, இந்த நாட்டில் வாழும் அனைத்து இனத்தவரையும் தழுவிய தேசிய அரசியலையே நான் மேற்கொள்கிறேன்.
எனினும் எனக்கு இருக்கும் அச்சுறுத்தல் வழமையாக பழி வாங்கப்படுவது போல் வடக்கு கிழக்கில் இருந்து வரவில்லை.
மலைநாட்டிலும் எனக்கு அச்சு றுத்தல் இல்லை. கொழும்பு மாவட்டத்திலும் மக்கள் மத்தியில் இருந்தும் என க்கு அச்சுறுத்தல் இல்லையெனத் தெரிவித்துள்ளார்.