கந்துவட்டிக்காரருக்கு கைமாறு செய்த சிறிதரன் !
கிளிநொச்சி உள்ளூராட்சி மன்ற தேர்த லில் போட்டியிடுபவர்களில் ஒருவர் ஜீவன். தமிழ் தேசிய கூட்டமைப்பின் ஊடாக போட்டியிடுகிறார்.
ஜீவன் வகையானவர்கள் மக்கள் நல அரசியலுக்கு பொருத்தமானவர்கள் என்பதை சிறிதரன் எப்படி தீர்மானி த்தார் என்பது புரியவில்லை.
ஏனெ னில், ஜீவனின் கடந்தகால வரலாறு அவரை தூய்மையான, நியாயமான அரசியலில் ஈடுபடுபவர் என நம்ப சிர மமானது. அற உணர்வுகளிற்கு அப்பால் சென்று பொருளீட்டுபவராகவே ஜீவன் தன்னை அடையாளப்படுத்திக் கொண்டுள்ளார். தற்போது பொது வாழ்விற்கு ஜீவன் நுழைந்துள்ளதால், ஜீவன் அதற்கு பொருத்தமானவரா என்று பகிரங்க விவாதம் நடத்துவதில் தவறில்லையென கருதப்படுகின்றது.
தர்மபுரத்தை சேர்ந்த ஜீவன் எப்படி கந்துவட்டி அறவிடுகிறார் என்பதை பிர தேச வாசிகளிற்கு நாம் சொல்ல வேண்டியதில்லை. ஹரினிகா நகைக்கடை உரிமையாளர் தற்கொலை செய்துகொண்டார். ஜீவனிடம் வட்டிக்கு பணம் வாங்கியவரே இவரும்.
இவரது மரணத்திற்கு ஜீவன் மீது பிரதேசவாசிகள் குற்றம்சாட்டுகிறார்கள். வட்டி, வட்டிக்கு வட்டியென ஜீவன் கடந்த எட்டு வருடத்தில் கோடிக்கணக்கில் சம்பாதித்துள்ளார்.
அண்மையில் விசுவமடுவில் நடந்த சம்பவமொன்று ஊடக ங்கள் வாயிலாக பிரபலமடைந்திருந்தது.
கந்துவட்டி வாங்கி தலைமறைவான ஒருவரை மீள ஊருக்கு அழைத்து வந்து, அவருக்காக பொறுப்பு நின்ற வர்த்தகர் ஒருவரின் வீடு கந்துவட்டிக்காரரல் எடுக்கப்பட்ட சம்பவமே அது. இதில் சம்பந்தப்பட்ட கந்துவட்டிக்காரர் தமிழ் தேசிய கூட்டமைப்பின் வேட்பாளர் ஜீவனே.
கந்துவட்டிக்கு அவரிடம் பணம் வாங்கிய பலர் பிரதேசத்தை விட்டு தலை மறைவாகியுள்ளனர்.
விடுதலைப்புலிகளின் வாணிபங்களிற்கிடையில் வர்த்த கம் செய்து எப்படி தனது வர்த்தக வாழ்க்கையை ஜீவன் ஆரம்பித்தார் என்ப தையும், 2009 இன் பின்னர் ஜீவன் உள்ளூரில் எப்படி செயற்பட்டார் என்பதை யும் தமிழ் பக்கம் அறியும்.
தர்மபுர பகுதிகளில் சட்டவிரோத செயற்பாடுகளில் பொலிசாரிடம் சிக்கினால், ஜீவனை தொடர்பு கொண்டால் “எல்லாம் சரியாகும்“ என்ற அபிப்பிராயம் உள்ளூரில் உள்ளது.
வட்டிப்பணத்தை வாங்க ஜீவன் கைக்கொள்ளும் நடவடிக்கைகள் பற்றிய பல அதிர்ச்சி தகவல்களை உள்ளூரில் பேசிக்கொள்கிறார்கள்.
எப்படியோ, கந்து வட்டிக்காரர் ஒருவரை சமூகசேவகராக்க சிறிதரன் எம்.பி முயல்கிறார். இது உள்ளூரில் பலத்த விமர்சனங்களை ஏற்படுத்தியுள்ளது.
அது சில விமர்சனங்களையும் எழுப்பியுள்ளது. குறிப்பாக, சிறிதரன் எம்.பியின் பணமும் ஜீவன் மூலம் வட்டிக்கு விடப்படுவதாக, ஜீவனுடன் முன்னர் நெரு க்கமாக இருந்தவர்கள் மூலம் ஊரில் ஒரு கதை பரவியுள்ளது.
இந்த தகவலை தமிழ் பக்கம் இதுவரை உறுதி செய்யவில்லை. இருந்தாலும், மக்கள் பிரதி நிதிகள் பற்றிய பொது அபிப்பிராயத்தை அவர்களது கூட்டுக்களே ஏற்படுத்துமென்பது உண்மையில்லையா?
- நன்றி தமிழ் பக்கம் -